For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளக் காதலியை கொலை செய்து உடலை நாய்க்கு போட்டதை ஒப்புக் கொண்டார் பிரபல கால்பந்து வீரர்!

By Mathi
Google Oneindia Tamil News

Football star 'plotted to kill ex-lover, feed her to dogs'
ரியோடிஜெனிரோ: பிரேசிலைச் சேர்ந்த வளர்ந்து வரும் கால்பந்து வீரர் ப்ரூனோ பெர்னாண்டஸ் டிசோசா தமது கள்ளக் காதலியை கடத்தி கொலை செய்து அவரது உடலை துண்டுகளாக்கி பாகங்கள் சிலவற்றை தமது நாய்களுக்கு உணவாகப் போட்ட பயங்கரத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பிரேசில் நாட்டின் பிளமிங்கோ கால்பந்து கிளப் அணியில் கோல்கீப்பராக இருப்பவர் ப்ரூனோ. இவரது கள்ளக் காதலி எலீசா சமுடியோ. இருவருக்கும் இடையேயான உறவில் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை விஷயத்தில் ப்ரூனோ தொடக்கம் முதலே விரும்பவில்லை. ப்ரூனோவின் எதிர்ப்பையும் மீறி எலீசா குழந்தை பெற்றெடுத்தது ப்ரூனோவுக்கு எரிச்சலாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து தமது நண்பரும் போலீஸ் அதிகாரியுடமான சாண்டோஸ் என்பவரை அணுகி எலீசாவை கொலை செய்யக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து ரியோடிஜெனிரோ நகரிலிருந்து எலீசாவைக் கடத்திய லூயிஸ், பெலோ ஹாரிசான்டே என்ற நகருக்குக் கொண்டு சென்று அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார். அதன் பின்னர் ப்ரூனோ முன்னிலையில் எலீசா கொல்லப்பட்டிருக்கிறார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். எலீசாவின் சில பாகங்களை தமது வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குப் போட்டுவிட்டு உடல் பாகங்களை வீட்டிலேயே கான்கிரீட் வைத்து பூசி புதைத்துவிட்டார் ப்ரூனோ.

இந்தக் கொடூர கொலை தொடர்பாக ப்ரூனோ, அவரது மனைவி உட்பட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. தொடக்கத்தில் தம் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தே வந்தார் ப்ரூனோ.

இந்நிலையில் நேற்று நீதிமன்ற விசாரணையின் போது அவர், எலீசாவை கொலை செய்து உடல் துண்டுகளை நாய்க்குப் போட்டதை ஒப்புக் கொண்டார்.

ப்ரூனோ குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 40 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ப்ரூனோவின் கனவு தகர்ந்து போனது.

English summary
A Brazilian football star accused of killing his ex-lover to avoid child support payments has admitted she was murdered, dismembered and fed to dogs, but denied ordering the killing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X