
டெல்லி: காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,
இலங்கையில் தமிழர்கள் அனுபவித்து வருகிற துயரங்கள், நமது இதயத்தை தொடுகின்றன. இலங்கை தமிழர்கள் சிங்கள மக்களுக்கு நிகராக அனைத்து உரிமைகளையும், சம அளவிலான சட்ட பாதுகாப்பையும் பெற வேண்டும் என்பதற்கு நாம் அளித்து வந்த ஆதரவில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்திலிருந்து எந்த தடுமாற்றமும் இல்லை.
அவர்களுக்கு சட்டப்பூர்வமான அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்கதையாகி வரும்விதம் நம்மை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கி இருக்கிறது. அப்பாவி மக்கள் மீதும், குழந்தைகள் மீதும் சொல்ல இயலாதபடிக்கு வன்கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளதாக, குறிப்பாக 2009ல் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம் அடைந்தபோது இழைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் நம்மை வருத்தம் அடையச் செய்துள்ளன.
அதனால்தான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.










