Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: யாகூப் மேமன் தூக்கு தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்

Posted by:
Updated: Thursday, March 21, 2013, 18:53 [IST]

டெல்லி: 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் 10 பேரின் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.

கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் 12 இடங்களில் குண்டுகள் வெடித்து. இதில் 257 பேர் பலியானார்கள் என்றும், 713 பேர் காயம் அடைந்தனர் என்றும் கூறப்பட்டது. இந்த தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக இருந்த மும்பை தாதா தாவூத் இப்ராகிம் இன்று வரை தலைமறைவாக உள்ளார்.

இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், அவனது தம்பி அயூப் மேமன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் ஒருவரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேரில் 2 பேரும் இறந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் பி.எஸ். சவ்கான் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். அதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் 10 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்தனர். ஆனால் யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை மட்டும் அவர்கள் ரத்து செய்யவில்லை. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி யாகூப் தான் அதனால் அவரின் தூக்கு தண்டனையை உறுதிபடுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Story first published:  Thursday, March 21, 2013, 12:17 [IST]
English summary
The Supreme Court upheld the death sentence of Yakub Memon in the 1993 Mumbai blasts case saying that he was the biggest accused in the case.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs