Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சிபிஐ ரெய்ட்.. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்: கருணாநிதி

Posted by:
Updated: Thursday, March 21, 2013, 12:47 [IST]

 Cbi Raid On Stalin May Or May Not Be Political Vendetta

சென்னை: காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகியவுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது, அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ரெய்ட் ஆரம்பித்து அதை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எதிர்த்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதைக் கண்டித்ததாகவும், ரெய்ட்டுக்குக் காரணமான மத்திய இணையமைச்சர் நாராயணசாமியை கடிந்து கொண்டதாகவும் செய்திகள் வந்த நிலையில், ரெய்டை சிபிஐ அதிகாரிகள் பாதியிலேயே நிறுத்திவிட்டுச் சென்றனர்.

இந் நிலையில் நிருபர்களை சந்தித்தார் கருணாநிதி. அவரது பேட்டி:

கேள்வி: மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடந்திருக்கிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி: காலையில் 10 மணிக்குத் தான் அதுபற்றி அறிந்தேன். அதன் பிறகு தான் செய்தி பார்த்தேன். அது பற்றிய விளக்கங்கள் ஸ்டாலினால் தரப்பட்டிருக்கிறது. நடைபெற்றது தவறு என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டவர்களால் கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

கேள்வி: காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகிய காரணத்தால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட சோதனை என்று இதை நீங்கள் கருதுகிறீர்களா?

கருணாநிதி: உங்களுடைய கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: ஒரு மத்திய அமைச்சர் (ப.சிதம்பரம்) இந்தச் சோதனை தனக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறியிருப்பதை நீங்கள் நம்பத் தயாரா?

கருணாநிதி: மத்திய அமைச்சர் அப்படி சொல்லியிருக்கிற போது நான் நம்ப முடியாது என்று சொல்ல முடியாது.

கேள்வி: இது அரசியல் காழ்ப்புணர்வு இல்லை என்று நினைக்கிறீர்களா?

கருணாநிதி: பொதுவாக தி.மு.கழகத்தைச் சுற்றி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமான நடவடிக்கைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

கேள்வி: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்பதைப் போலச் சொல்லுகிறீர்கள். கார் வாங்கியது என்பது எப்போதோ நடந்த செயல். அதற்காக நீங்கள் கூட்டணியிலிருந்து விலகிய மறுநாளே சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கருணாநிதி: அதைப் பற்றி பல கட்சித் தலைவர்களும் எதிர்த்து கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அந்தக் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன்.

கேள்வி: சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரே துணை அமைச்சரிடம் அதற்காக வருத்தம் தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே?

கருணாநிதி: மத்திய அமைச்சர் இந்தச் சோதனைக்கு ஒப்புதல் தரவில்லை என்பதை அவரே வெளிப்படையாக அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார். அதற்கு மேல் நான் எதுவும் சொல்வது முறையல்ல.

கேள்வி: காங்கிரஸ் கட்சியின் கடந்த கால வரலாறுகளைப் பார்த்தால், கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியாவது விலகினால் இது போல பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இதுவும் ஒன்று தானே?

கருணாநிதி: பழி வாங்கும் அரசியல் டெல்லியிலே மாத்திரமல்ல; தமிழ்நாட்டிலும் இருக்கிறது.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Story first published:  Thursday, March 21, 2013, 12:27 [IST]
English summary
Dravida Munnetra Kazhagam (DMK) supremo M. Karunanidhi on Thursday said the raid conducted by the Central Bureau of Investigation (CBI) at his son Stalin's residence 'may or may not be a political vendetta'. "If the Central Minister says they were not aware of the CBI raids on M.K. Stalin, we have reasons to believe them," he said.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Royal Challengers Bangalore: 67 / 1, 5.2 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 50 runs