Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஸ்டாலின் மகனுக்கு 'தலைவலி' தந்த ஹம்மர்.. ஆனால் நாயுடு 'தலை'யைக் காத்த அட்டகாச கார்!

Posted by:
Updated: Thursday, March 21, 2013, 18:48 [IST]

சென்னை: ஹம்மர் கார் வாங்கப் போய் இன்று சிக்கலில் மாட்டியுள்ளார் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். என்றோ வாங்கிய இந்தக் காரை வைத்து இன்று அரசியல் சதுரங்கத்தை நடத்தியுள்ளது காங்கிரஸ்.

ஹம்மர்... இந்தப் பெயர் ஒரு நேரத்தில் பெரும் பெரும் பணக்காரர்கள் வாயில் ஹம்மிங்காக வலம் வந்த பெயர். அப்படி ஒருஅட்டகாசமான கார். ஹம்மர் இருந்தால் அவர் பெரிய்ய்ய்ய்ய ஆள் என்று ஒரு கெளரவம் கிடைக்கும்.

அந்த ஹம்மரை வாங்கப் போய்த்தான் இன்று சிக்கலில் மாட்டியுள்ளது ஸ்டாலின் குடும்பம்.

கம்பீரமான ஹம்மர்

கார்களிலேயே கம்பீரமான கார் என்ற பெயரை வைத்திருந்தது ஹம்மர் கார். இந்த வகை காரைத்தான் வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஹம்மர் எச்3

உதயநிதி ஸ்டாலின் வாங்கிய கார் ஹம்மர் எச்3 வகையாகும். இதன் விலை அப்போது ரூ. 20 கோடி என்று கூறப்படுகிறது.

பக்கவான பாதுகாப்பு

பக்காவான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கார் ஹம்மர். சாலையில் இறங்கி ஓட ஆரம்பித்தாலே அத்தனை பேரும் ஆச்சரியத்துடன் பார்த்து பிரமிக்கக் கூடிய கம்பீரமான வடிவமைப்பு இதற்கு உண்டு.

எல்லா நாட்டிலும் கிடைக்காது

இந்தக் காரின் விற்பனை எல்லா நாடுகளிலும் இருக்காது. குறிப்பிட்ட சில நாடுகளில்தான் இதை வாங்க முடியும். தத்தமது நாடுகளில் உள்ள கார் விற்பனை நிறுவனங்களை அணுகி அவர்கள் மூலம் ஆர்டர் செய்து இந்தக்காரை வாங்கலாம்.

ஆஸ்திரேலியாவில் வாங்கினார் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் இந்தக் காரை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது. அப்படி வாங்கியபோது அதற்குரிய வரியை இந்திய அரசுக்கு செலுத்தவில்லை என்பதுதான் சர்ச்சையாகும்.

சந்திரபாபு நாயுடு உயிரைக் காத்த கார்

இந்த ஹம்மர் கார், ஸ்டாலின் குடும்பத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியிருந்தாலும், முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தலையைக் காத்த காராகும் - அதாவது உயிரைக் காத்த கார்.

2003ல் நடந்த பயங்கரம்

2003ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி திருப்பதி அருகே நக்சலைட்கள் வைத்த வெடிகுண்டில் சந்திரபாபு நாயுடுவின் ஹம்மர் கார் சிக்கிக் கொண்டது. அந்த சம்பவத்தில் நாயுடு சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கார் என்பதால் நாயுடு உள்பட காரில் இருந்த அனைவருமே காயங்களுடன் தப்பினர்.

மகனுக்கு ஹம்மர் - அப்பாவுக்கு ரேஞ்ச்ரோவர்

உதயநிதி ஸ்டாலின் ஹம்மர் கார் வைத்திருக்கிறார் என்றால், தந்தை மு.க.ஸ்டாலின் ரேஞ்ச் ரோவர் கார் வைத்திருக்கிறார். இன் விலை ரூ. 90 லட்சத்திற்கும் மேல் என்று கூறப்படுகிறது.

Story first published:  Thursday, March 21, 2013, 11:04 [IST]
English summary
Hummer - it has become a headache to Udayanidhi Stalin. But the same car saved Chandrababu Naidu, the former Chief Minister of Andhra Pradesh. Here is a round up.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 0 / 0, 0.1 Overs
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets