Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கோபம் வந்தா கடிக்குறதுல உங்கள மாதிரிதான்.. மனிதர்கள் போன்றே உணர்வுகளை பிரதிபலிக்கும் நாய்கள்

Posted by:
Updated: Thursday, March 21, 2013, 19:26 [IST]

பெல்ஜியம்: கோபத்துல நாம நாய்ங்க மாதிரி கடிக்கிறதும், நன்றில நாய்ங்க நம்மள் மாதிரி நடந்துக்கறதும் எல்லாருக்கும் ஏற்கனவே தெரிஞ்சது தான். ஆனா புதுசா இப்போ ஒண்ணு கண்டு பிடிச்சுருக்காங்க.

அது என்னன்னா, நாய் ஒன்றின் முக பாவங்களை, அது மகிழ்ச்சியாக இருக்கிறபோது, கண்டிக்கப்படுகிறபோது, கோபத்துக்கு உட்படுத்தப்படுகிறபோது உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் படம் பிடிச்சு பாத்தப்போ, அது மனிதர்களைப்போலவே உணர்வுகளை பிரதிபலிக்குதாம்.

நன்றி என்ற உயரிய பண்புக்கு நாய்களை நம்மில் பலரும் உதாரணமாகக் கூறுகிறோம். நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கிறவர்கள் நாய்களும், மனிதர்களைப் போன்றுதான் என பாராட்டு மொழி கூறுவதுண்டு.

நாய்களும் மனிதர்கள் போலத்தான்

இந்தப் பாராட்டு மொழி பசப்பு வார்த்தைகள் அல்ல. உண்மைதான் என்று கூறத்தக்க விதத்தில் ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியாகி இருக்கிறது.

விதம் விதமான போஸ்

பெல்ஜியத்தை சேர்ந்த ஷெபேர்டு வகை போலீஸ் நாய் ஒன்றின் முக பாவங்களை, அது மகிழ்ச்சியாக இருக்கிறபோது, கண்டிக்கப்படுகிறபோது, கோபத்துக்கு உட்படுத்தப்படுகிறபோது உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் படம் பிடித்து இருக்கிறார்கள்.

ஒரு நாயின் மகிழ்ச்சி

இந்தப் படங்களை தன்னார்வத் தொண்டர்களிடம் வழங்கினார்கள். அதில் நாயின் மகிழ்ச்சியான முகபாவத்தை 88 சதவீதம் பேர் மிகச் சரியாக அடையாளம் கண்டு கூறி இருக்கிறார்கள். நாயின் கோபத்தை 70 சதவீதம் பேர் அடையாளம் கண்டு சொல்லி இருக்கிறார்கள். இப்படி பல்வேறு தருணங்களில் நாயின் முக உணர்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு முடிவு, மனிதர்களைப்போலவே நாய்களும் உணர்வுகளை பிரதிபலிக்கின்றன என்பதற்கு ஆதாரமாக அமைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Story first published:  Thursday, March 21, 2013, 10:24 [IST]
English summary
One should never mix their own emotions into a scientific study. Humans would love to believe their little balls of fur are also human; however they are not and never will be. It is studies like this one which can be very damaging, as they may make owners confuse dominance with emotion. Yes, the other dogs had a reaction when another dog got the food, when the new baby arrived, or when they were ignored, but the "WHY" is the question. While dogs do possess emotions, they are not as complex as a human's. Dogs do, however, feel the emotions coming from humans. They feel our emotions as energy radiating from our bodies.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST