லண்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் லிமோசின் காரில் யாரோ டீசலுக்கு பதில் பெட்ரோல் நிரப்பியதால் அது அவரது இஸ்ரேல் பயணத்தின்போது பழுதானது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இஸ்ரேலின் டெல் அவிவிற்கு தனது லிமோசின் காரில் சென்றார். ஆனால் யாரோ அந்த காரில் டீசலுக்கு பதில் பெட்ரோலை நிரப்பியுள்ளனர். இதனால் கார் பாதி வழியிலேயே பழுதாகி நின்றுவிட்டது. இதையடுத்து ஜோர்டானில் இருந்து வேறு ஒரு கார் கொண்டு வரப்பட்டு அதில் அவர் டெல் அவிவ் சென்றார்.
இந்த சம்பவம் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.






















