For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீடாமங்கலம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை 'நகலை' வாங்க திவாகரன் மறுப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

Divakaran refuse to get Charge Sheet copy
திருவாரூர்: வீடு இடிப்பு வழக்கில் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையின் நகல்களை வாங்க முடியாது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் உட்பட 9 பேர் மறுத்துவிட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சோம.தமிழார்வன். இவரது கார் டிரைவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கஸ்தூரி. கஸ்தூரிக்கு சொந்தமான ரிஷியூர் வீடு கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் சசிகலாவின் தம்பி திவாகர , ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமேனன், ரிஷியூர் ராஜேந்திரன், வைத்தியநாதன், கணேசன், காந்தி என்கிற குணசேகரன், தமிழ்ச்செல்வன், வீரசிவசங்கர், சக்தி ஆகிய 9 பேர்ரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 9 பேரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் கொடுப்பதற்காக திவாகரன் உள்பட 9 பேரும் இன்று நீடாமங்கலம் ஜூடீசியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த நகலை வாங்க திவாகரன் உட்பட 9 பேரும் மறுத்துவிட்டனர். தங்களுக்கு ஒரிஜினல் குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 9- ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

English summary
V Divakaran, brother of Sasikala Natarajan, a close aide of Tamil Nadu Chief Minister J Jayalalithaa was refused to get copy of Charge Sheet and demand original charge sheet at Needamangalam court in land grab case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X