For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீநகரில் கொஞ்சிச் சிரிக்கும் துலிப் மலர்கள்.. ரசிக்கக் குவியும் கூட்டம்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: துலிப் மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன ஸ்ரீநகரில். இதையடுத்து அதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே. இந்தப் படம் யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் மறக்காது. அப்படி ஒரு அழகான காதல் கவிதை அது...ஷாருக்கான் ஒரு அழகு என்றால், கஜோல் இன்னொரு பிரமிப்பு.. அந்தக் காதல் காவியத்தின் இன்னொரு அங்கமாக இருந்தது அந்த அழகான துலிப் மலர் தோட்டம்.

துலிப் என்றாலே அழகுதான். அதைப் பார்த்தாலே காதல் வரும்.. அதுவும் காதல் துணையுடன் துலிப் மலர்க் கூட்டத்துக்குள் புகுந்து வந்து பாருங்கள், நிறைய வாழ வேண்டும் என்ற ஆசையும் வரும்.

ஆசியாவின் மாபெரும் துலிப் தோட்டம்

ஆசியாவின் மாபெரும் துலிப் தோட்டம்

ஆசியாவிலேயே மாபெரும் துலிப் தோட்டம் என்ற பெருமை இந்தியாவில் உள்ள ஒரு துலிப் மலர்த் தோட்டத்திற்கு உண்டு. அந்தத் தோட்டம் ஸ்ரீநகரில் இருக்கிறது.

தால் ஏரியின் கரையோரம்

தால் ஏரியின் கரையோரம்

உலகப் புகழ் பெற்ற தால் ஏரியின் அருகே ஜபர்வான் மலையடிவாரத்தில் இந்த மிகப் பெரிய துலிப் தோட்டம் உள்ளது.

பூத்துக் குலுங்கும் துலிப் மலர்கள்

பூத்துக் குலுங்கும் துலிப் மலர்கள்

இந்த தோட்டத்தில் தற்போது துலிப் மலர்கள் பூத்துக் குலுங்கி பேரழகுடன் காட்சி தருகின்றன. இதையடுத்து பார்வையாளர்களுக்காக தோட்டத்தைத் திறந்து விட்டுள்ளனற்.

ஆயிரக்கணக்கானோர் வருகை

ஆயிரக்கணக்கானோர் வருகை

2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த துலிப் மலர்த் தோட்டம். தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் இந்த தோட்டத்துக்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தர ஆரம்பித்துள்ளனர்.

English summary
Tourists enjoy the Asia's largest Tulip garden on the foothills of Zabarwan range overlooking world famous Dal Lake, after declared it open in Srinagar on Wednesday. The tulip garden, was inaugurated in 2008, has attracted thousands of tourists
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X