For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடுக் கடல் கேபிள்களில் நாச வேலை.. இந்தியாவில் இன்டர்நெட் வேகம் மேலும் குறைந்தது

Google Oneindia Tamil News

Sabotage of undersea cables to slow down internet speed for 30 days
டெல்லி: நடுக் கடலில் போடப்பட்டுள்ள கேபிள்களில் நாச வேலை நடந்துள்ளதால், இந்தியாவில் இன்டர்நெட்டின் வேகம் இன்னும் ஒரு மாதத்திற்கு மந்தமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட்டின் வேகம் உலகின் பல பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மகா மந்தமாக உள்ளது. ஸ்பேம் ஊடுறுவலே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

தற்போது இரண்டு முக்கிய நடுக் கடல் கேபிள்கள் திட்டமிட்டு துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்னும் ஒரு மாதத்திற்கு இன்டர்நெட் வேகம் மகா மந்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா, பார்தி ஏர்டெல், பிஎஸ்என்எல்

இந்தியாவைப் பொறுத்தவரை அரசின் பிஎஸ்என்எல் மற்றும் எம்.எஸ்என்எல், தனியாரான டாடாகம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல் ஆகியவற்றின் இணைப்புகள்தான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

14 நாடுகள் வழியாக வரும் கேபிள்கள்

14 நாடுகள் வழியாக நடுக் கடல் வழியாக வரும் கேபிள்களில் விஷமிகள் திட்டமிட்டு நாச வேலையில் ஈடுபட்டதால் டேட்டா அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவே மந்தநிலைக்குக் காரணம்.

பிரான்ஸ் முதல் ஆசியா வரை

பிரான்ஸ் முதல் எகிப்து வரையிலும், அதேபோல ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு சேதத்தைச் சந்தித்துள்ளனவாம்.

திங்கள் முதல் சிங்கிதானாம்

திங்கள்கிழமை முதல் மேற்கண்ட இன்டர்நேட் சேவை வழங்குவோரின் இணைப்புகளைப் பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தளத்தில் ஹேக்கிங்

இதற்கிடையே, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்குள் புகுந்த ஹேக்கர்கள் வாடிக்கையாளர்களை டென்ஷனாக்கி விட்டனர். இதனால் நேற்று கிட்டத்தட்ட 2 மணி நேரம் வாடிக்கையாளர்கள் திணறிப் போய் விட்டனர்.

English summary
Internet speeds in India, especially for customers of Bharti Airtel, Tata Communications and state-owned BSNL and MTNL are set to be disrupted for the next 20-25 days, after a key undersea cable, carrying data traffic across 14 countries, from Singapore to France, was cut off the coast of Egypt. Two other key cable networks, linking Asia to Europe, were also allegedly damaged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X