For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக்டர் ஆகணும்… முதலிடம் பிடித்த ஜெயசூர்யா, அபினேஷ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Toppers Jayasurya and Abinesh want to become doctors
ப்ளஸ் டூ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள் இருவருமே மருத்துவர் ஆகி சேவை செய்யவேண்டும் என்று தங்களின் எதிர்கால லட்சியம் பற்றி கூறியுள்ளனர்.

நாமக்கல்லில் உள்ள வித்யா விகாஸ் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஜெயசூர்யா ப்ளஸ் டூ தேர்வில் 1189 மதிப்பெண் பெற்று தமிழ்நாட்டிலேயே முதல் இடம் பெற்றுள்ளார்.அவரது தந்தை செந்தில் குமார் முதுகு தண்டுவடப் பிரச்சினையால் படுத்த படுக்கையாக உள்ளார். தாயார் ஆனந்தி கூலி வேலை செய்து சிரமத்திற்கிடையே படிக்க வைத்துள்ளார்.

எலும்பு மூட்டு சிகிச்சை

குடும்ப சூழ்நிலை புரிந்து படித்த ஜெயசூர்யாவிற்கு மருத்துவர் ஆகவேண்டும் என்பதுதான் விருப்பம். குறிப்பாக எலும்பு, மூட்டு மருத்துவர் ஆகி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சை நிபுணர்

இதேபோல் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் அபினேஷ் 1189 மதிப்பெண் பெற்றுள்ளார். அவருடைய தந்தை வங்கியில் உதவி மேலாளராக உள்ளார். தாயார் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு இதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது லட்சியம். மக்களுக்கு சேவை செய்வதே எதிர்கால குறிக்கோள் என்று கூறியுள்ளார்.

English summary
+2 toppers Jayasurya and Abinesh from Namakkal have expressed their wish to become doctors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X