For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைக்கு ஒன்று என்றால் பதறும் முதல் நாடு இந்தியா தான்: பசில் ராஜபக்சே

Google Oneindia Tamil News

India among first countries to help: Basil
கொழும்பு: இலங்கைக்கு ஒன்று என்றால் உதவி செய்வதில் முதன்மை நாடாக இந்தியா உள்ளது என இலங்கை அமைச்சருமான பசில் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை போரில் வீடிழந்து வாடும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியா 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க சம்மதித்தது. .

அதன் ஒரு கட்டமாக தற்போது 4 ஆயிரம் வீடுகள் பட்டிகோலா பகுதியில் கட்டப்பட்டுள்ளன. அந்த வீடுகளின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், இலங்கை அமைச்சருமான பசில் ராஜபக்சே கலந்து கொண்டு உரையாற்றினார்..

விழாவில் பசில் பேசியதாவது:-

இலங்கைக்கு இந்தியா மிகவும் நட்பு நாடாக உள்ளது. எங்களது வளர்ச்சியில் இந்தியா எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு ஒன்று என்றால் உதவி செய்வதில் முதன்மை நாடாக இந்தியா உள்ளது. போருக்கு பிறகு நாங்கள் செய்த மறுவாழ்வு திட்டங்களை இந்தியா பாராட்டி உள்ளது. இலங்கையில் இந்தியா தூதராக இருந்த அசோக் கந்தா இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்துள்ளார் என இவ்வாறு பசில் பேசினார்.

English summary
India was one of the first countries to extend help to Sri Lanka and relationship between the two countries continued to grow, said Sri Lanka’s Minister of Economic Development Basil Rajapaksa here on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X