For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்செந்தூர் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலம் மீட்பு!

Google Oneindia Tamil News

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

முருகப்பெருமானில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் முருகன் கோவில்.

இந்த கோவிலுக்குச் சொந்தமான 96 சென்ட் புன்செய் நிலம் வடக்கு டோல் கேட் அருகில் நந்தவனமாக இருந்த பகுதியை சிலர்

Tiruchendur Temple

கடந்த சில வருடமாக ஆக்ரமிப்பு செய்து இருந்தனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்றது. வழக்கு முடிவில், ஆக்மிரப்பு என்பதை உறுதிப்படுத்திய சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதை உடனே அகற்றுமாறு கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

அதன் பேரில், கோவில் இணை ஆணையர் (பொ) ம.அன்புமணி, திருச்செந்தூர் வட்டாட்சியர் ப.நல்லசிவன், வருவாய் ஆய்வாளர் மு.சங்கரநாராயணன், காவல் உதவி ஆய்வாளர்கள் குமாரசெல்வன் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதன் மூலம் கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டுள்ளது.

English summary
Rupees 100 Crore worth land belongs to Tiruchendur Murugan temple retrieved by the officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X