For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய 11 வயது பொடியன்!

Google Oneindia Tamil News

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 36 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளான் 11 வயது சிறுவன். தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவைத்தான் இவன் கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளான்.

இதையடுத்து அந்தப் பெண் மீது கற்பழிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று அந்த நாட்டில் கோரிக்கை கிளம்பியுள்ளது.

இதுவரை இப்படிப்பட்ட விவகாரங்களில் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க அங்கு போதிய சட்டம் இல்லாததையும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் மனதைக் கலைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மன நல ஆலோசகர்கள் எழுப்பியுள்ளனர்.

நியூசிலாந்தின் தற்போதைய சட்டப்படி ஆண்கள் மீது மட்டுமே கற்பழிப்பு வழக்குகளைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்கள் மீதும் கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சிறுவனின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இருவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அந்தப் பையனின் பள்ளி முதல்வர் கூறுகையில், இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டேன். என்னிடம் வந்து நடந்ததைக் கூறினான். அதைக் கேட்டு நான் உறைந்து விட்டேன். நான் எனது தோழனின் தாயுடன் செக்ஸ் வைத்துள்ளேன். அது தவறு என்று தெரிகிறது. அதை நான் நிறுத்த வேண்டும் என்று அவன் சொன்னான்.

அந்த சிறுவன் மூலம் அப்பெண் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்து நான் மேலும் அதிர்ச்சியானேனன் என்றார் அவர்.

நியூசிலாந்து சட்டப்படி ஆண்கள் மீது தொடரப்படும் கற்பழிப்பு வழக்குகளில் அதிகபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகும். அதேசமயம், ஆண்களை வற்புறுத்தி செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மீது வழக்கு தொடரப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை கிடைக்கும். ஆனால் அது கற்பழிப்பு என்ற பிரிவின் கீழ் வராதாம்.

English summary
An 11-year-old New Zealand boy was reported Saturday to have fathered a child with the 36-year-old mother of a school friend, raising questions on why women cannot be charged with rape in the country. Counsellors working in the area of child sexual abuse said the case highlighted a lack of attention to women as potential offenders, according to the New Zealand Herald, which reported the story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X