For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2012ல மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 38,000 குற்றங்களாம்: அதுல, 8541 கற்பழிப்புகள்...

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, சென்ற வருடம் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 38000 குற்றங்கள் பதிவாகியுள்ளதாம். அதிலும், 8541 கற்பழிப்பு குற்றங்களாம்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த அமைப்பு 2012ஆம் ஆண்டுக்கான குற்றப்பதிவு பட்டியலை வெளியிட்டது.

அக்குற்றப்பதிவு பட்டியல் மூலம், ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் குழந்தைகள் மீதான வன்முரை பெருகி வருவது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக சிறுமிகள் கற்பழிப்பு விகிதம் கூடிக்கொண்டே வருவது உறுதியாகியுள்ளது.

சிறுமிகள் பலாத்காரம்...

சிறுமிகள் பலாத்காரம்...

இந்தியாவில், 2007ம் ஆண்டு கற்பழிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 5045லிருந்து, 2008ல் 5446 ஆக உயர்ந்து 2009ல் 5336 ஆக குறைந்தது. பின் மீண்டும், 2010ல் 5484 ஆக உயர்ந்து 2011ல் 7112 ஆக எகிறி, கடந்த ஆண்டில் 8541 ஆகி அதிர்ச்சியைத் தந்துள்ளது.

மத்திய பிரதேசம் முதலிடம்...

மத்திய பிரதேசம் முதலிடம்...

ஒரே ஒரு ஆண்டைத் தவிர தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மத்திய பிரதேச மாநிலம் தான் குழந்தைகள் வன்முறையில் முதலிடத்தில் உள்ளதாம். மத்திய பிரதேசத்தில் 2007ம் ஆண்டில் 1043 சிறுமிகளும், 2008ல் 892 சிறுமிகளும், 2009ல் 1071 சிறுமிகளும், 2010ல் 1182 சிறுமிகளும், 2011ல் 1262 சிறுமிகளும், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 1632 சிறுமிகளும் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமைகள்...

பாலியல் வன்கொடுமைகள்...

2012ஆம் ஆண்டு இறுதி கணக்குப்படி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், வரதட்சிணைக் கொடுமை என 2 லட்சத்து 44,270 குற்றங்கள் (யூனியன் பிரதேசங்கள் உள்பட) நிகழ்ந்துள்ளனவாம். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 7,192 குற்றங்கள்.

கொலை வழக்குகள்...

கொலை வழக்குகள்...

இந்தியா முழுவதும் 34,434 கொலைகளும், தமிழகத்தில் 1,949 கொலைகளும் நிகழ்ந்துள்ளன. உத்தரப் பிரதேசம் - 4,966, பிகார் 3,566, மகாராஷ்டிரம் - 2,712, மத்தியப் பிரதேசம் - 2,373, மேற்கு வங்கம் -2,252, கர்நாடகம் - 1860, குஜராத்தில் 1,126 கொலைகள் நிகழ்ந்துள்ளன.

கொலை முயற்சி...

கொலை முயற்சி...

கொலை முயற்சி என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் 35,138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் பதிவானவை 2,954 வழக்குகள்.

திருட்டு, கொள்ளை...

திருட்டு, கொள்ளை...

திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் இந்தியா முழுவதும் 4 லட்சத்து 65,055 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 18,467 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிதி மோசடி...

நிதி மோசடி...

நிதி மோசடி உள்ளிட்ட பொருளாதாரக் குற்றங்கள் பிரிவில் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 14,455 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4,790 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இணைய குற்றங்கள்...

இணைய குற்றங்கள்...

இணைய குற்றங்களைப் பொறுத்தவரை இந்தியா முழுவதும் 3,477 வழக்குகளும், தமிழகத்தில் மட்டும் 41 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 561 வழக்குகள்.

காவக்துறைக்கு எதிரான புகார்கள்...

காவக்துறைக்கு எதிரான புகார்கள்...

போலீஸாருக்கு எதிராக இந்தியா முழுவதும் 57,363 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 378 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12,412 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சொத்து பறிமுதல்...

சொத்து பறிமுதல்...

இந்தியா முழுவதும் ரூ.21,071.94 கோடி மதிப்புக்கு சொத்து திருட்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.1,417.93 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்தத்தில் 6.7 சதவீதம் மட்டுமே ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை ரூ.137.44 கோடி வரை சொத்து திருட்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.82.58 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தத்தில் 60.1 சதவீதம் காட்டப்பட்டுள்ளது.

மொத்த வழக்குகள்...

மொத்த வழக்குகள்...

மொத்தத்தில், இந்தியா முழுவதும் 2012ஆம் ஆண்டில் 60 லட்சத்து 41,559 வழக்குகள் பல்வேறு புகார்களின் அடிப்படையில் போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். அதில், தமிழகத்தில் மட்டும் 7 லட்சத்து 49, 538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

English summary
The incidence of minors getting raped in the country has been on the rise since the past six years. While 5,045 such cases were reported in 2007, in 2012 the figure touched 8,541, according to data of the National Crime Records Bureau (NCRB).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X