For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனது ‘அமெரிக்க ஜனாதிபதி’ ஆசையை சூசகமாகச் சொன்ன ஹிலாரி கிளிண்டன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தன் வாழ்நாளில் ஒரு பெண் அமெரிக்க ஜனாதிபதியாக வரவேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார் ஹிலாரி கிளிண்டன். இதன் மூலம் அவரது ஜனாதிபதி கனவை மறைமுகமாக தெரிவித்துள்ளார் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முந்தைய ஆட்சி காலத்தில் வெளியுறவு துறை மந்திரியாக பதவி வகித்த இவர், அமெரிக்காவின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒருவராக உலகளவில் அறியப் படுகிறார்.

அரசியல் செல்வாக்கு...

அரசியல் செல்வாக்கு...

தற்போது, மேலாண்மை தகுதி மற்றும் தலைமை பண்பு தொடர்பான கருத்தரங்குகளில் சிறப்புரைகள் நிகழ்த்தி, மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார் ஹிலாரி. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் தனது அரசியல் செல்வாக்கை பெருக்கி வருகிறார் என இவர் மீது ஏற்கனவே விமர்சனங்கள் உண்டு.

வாழ்நாள் ஆசை...

வாழ்நாள் ஆசை...

இந்நிலையில், அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், கனடா நாட்டு மாணவர்களுடன் 'யூ டியூப்' மூலமாக பேசியுள்ளார் ஹிலாரி கிளிண்டன். அதில், 'எனது வாழ்நாளுக்குள் அமெரிக்காவின் அதிபராக ஒரு பெண்மணி பொறுப்பேற்பதை காண ஆசைப்படுகிறேன்.

பெண் ஜனாதிபதி...

பெண் ஜனாதிபதி...

அடுத்த முறையோ... அல்லது, அதற்கு அடுத்த முறையோ... சிரமமான அந்த பதவியில் ஒரு பெண் அமர்ந்து அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்ற செய்தியை ஆண் சமுதாயத்துக்கு நாம் வெளிப்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

English summary
Hillary Clinton spoke Thursday about her “hypothetical” desire to see a woman president “in my lifetime,” the latest scrap of data fueling the will-she-run-in-2016 chatter about the former senator and secretary of state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X