For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஆர்என்எஸ்எஸ் சாட்டிலைட்டுடன் நள்ளிரவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி 22

Google Oneindia Tamil News

India launches navigational satellite
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் நேவிகேஷனல் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ் -1ஏவை சுமந்தபடி பிஎஸ்எல்வி சி 22 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்திய நேரப்படி சரியாக இரவு 11.41 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் இந்தியா, ஒரு ராக்கெட்டை ஏவுவது இதுவே முதல் முறையாகும்.

விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ செயற்கைக்கோளானது தரைவழி, விமான மற்றும் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

1,425 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

இந்தியா உருவாக்கியுள்ள பிரத்யேகமான வழிகாட்டி செயற்கைக்கோள் இது. இப்படிப்பட்ட செயற்கைக் கோள்களை வெகு சில நாடுகளே வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India has joined an exclusive band of countries having their own navigation systems with the launch of the IRNSS-1A satellite which was put in orbit by the PSLV-C22 about 20 minutes after it blasted off from the Satish Dhawan Space Centre, Sriharikota. Precisely at 11.41 pm, India's workhorse Polar Satellite Launch Vehicle (PSLV) lifted off in a perfect text book launch, carrying IRNSS-1A, painting a dense golden flame in the dark canvas of the sky.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X