For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தகயா குண்டுவெடிப்பு குறித்து கேள்விப்பட்டு அதிர்ந்துபோன ராஜபக்சே

By Siva
Google Oneindia Tamil News

Rajapaksa
கொழும்பு: பீகாரில் உள்ள மகாபோதி கோவிலில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து அறிந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

இது குறித்து இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் ஊடக தொடர்பாளர் விஜயந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புனித இடத்தில் குண்டு வெடித்தது ராஜபக்சேவுக்கு வேதனை அளிக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் விசாரணை நடத்தி அவருக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு பற்றி தகவல் கிடைத்தவுடன் ராஜபக்சே மகாபோதி கோவிலின் தலைவரை அணுகி பேசினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் உள்ள பிரபல புத்த கோவிலான மகாபோதி கோவிலில் இன்று காலை 9 குண்டுகள் வெடித்ததில் 5 பேர் காயம் அடைந்தனர். இந்த கோவிலுக்கு இலங்கையில் இருந்து ஏராளமானோர் புனித யாத்திரை வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sri Lankan President Mahinda Rajapaksa was today shocked and dismayed by the news of serial explosions in internationally renowned Mahabodhi temple in India, a place of religious significance for the Buddhists. "President Rajapaksa was shocked and dismayed by the news," Presidential Media Coordinator Wijayananda Herath said. The official said the President had spoken to the chief incumbent of the Mahabodhi temple and also directed both the external affairs ministry and the High Commission in Delhi to probe and report to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X