For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபுகுஷிமா சுனாமி தாக்குதல்: நிலத்தடி நீரில் அணுக் கதிர் வீச்சு பாதிப்பு அதிகரிப்பு

Google Oneindia Tamil News

Fukushima nuclear plant: Radioactive water leak found
டோக்கியோ: ஜப்பானில் 2011ம் ஆண்டு உண்டான சுனாமி தாக்குதலால் ஃபுகுஷிமா அணு மின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போதும், நிலத்தடி நீரில் அணுக் கதிர்வீச்சு பாதிப்பு அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஜப்பான், ஃபுகுஷிமாவில் உள்ள அணு மின் நிலையம் , 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த சுனாமி தாக்குதலில் கடும் பாதிப்புகளைச் சந்தித்தது. இதனால் அதன் அருகாமையில் வசித்து வந்த ஆயிரணக்கணக்கான மக்கள் அணுக்கதிர்வீச்சுக்குப் பயந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றனர்.

இந்நிலையில், அந்நகரில் சமீபத்தில் ஆய்வு ஒன்று எடுக்கப்பட்டது. அதில், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகளவில் அணுக் கதிர் வீச்சு பாதிப்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது இரண்டாண்டுகளுக்கு முன்பு உண்டான சுனாமியின் காரணமாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, அரசு விதிப்படி சீசியம்-134 அணுக் கதிர் வீச்சின் அளவு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 60 பெக்கரல்ஸ் அலகு ஆகவும், சீசியம்-137 அணுக் கதிர் வீச்சின் அளவு 90 பெக்கரல்ஸ் அலகு ஆகவும் இருந்தால் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், இவை இப்போது முறையே 9,000 பெக்கரல்ஸ், 18,000 பெக்கரல்ஸ் என்ற அபாயகரமான அளவில் உள்ளது.

இந்த அபாயகரமான கதிர்வீச்சால், அப்பகுதியில் உள்ளோருக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது. இது குறித்து ஃபுகுஷிமாவில் உள்ள அணு மின் நிலையத்தை நிர்வகிக்கும் டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது, ‘நிலத்தடி நீரில் இந்த அளவுக்கு அணுக் கதிர் வீச்சு ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. அணு மின் நிலையத்தின் எப்பகுதியிலிருந்து கதிர் வீச்சு கசிகிறது என்பது தெரியவில்லை. அது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதே போன்று கடந்த ஜூன் மாதம், ஸ்ட்ரோனியம்-90 என்ற அணுக் கதிர் வீச்சின் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக 2011-ம் ஆண்டு டிசம்பரில் பதவியை ராஜிநாமா செய்த, ஃபுகுஷிமா அணுமின் நிலைய முன்னாள் தலைவர் மாசோ யோஷிதா (58), தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

இத்தகவலைத் தெரிவித்த டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் நிறுவன செய்தித் தொடர்பாளர் யோஷிமி ஹிடோசுகி, ‘அவரது புற்றுநோய்க்கு அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட கதிர் வீச்சு காரணமல்ல' என தெரிவித்துள்ள போதிலும், மாசோவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

மாசோ யோஷிதா, தலைவராக பதவியில் இருந்த காலக்கட்டத்தில் தான், அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டதும், கதிர்வீச்சு பரவும் அபாயத்தை தடுக்க அவர் தலைமை தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Tepco announced that it had found radioactive caesium in ground water around the plant. The plant was damaged in an earthquake and tsunami in 2011, and has been hit by several leaks and power failures in recent months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X