For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை... அதிமுக ஆட்சியில் தொடரும் அரசியல் கொலைகள்: கருணாநிதி கண்டனம்

Google Oneindia Tamil News

Karunanidhi condemned auditor Ramesh murder
சென்னை: கடந்த 19ம் தேதி சேலத்தில், தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் வி.ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். அன்னாரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக ஆட்சியில் அரசியல் கொலைகள் தொடர்கதையாகி வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் அரசியல் கொலைகள் தொடர்கின்றன என்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கொலைகள் நின்ற பாடில்லையே? என்ற கேள்விக்கு அவர் தெரிவித்துள்ள பதிலாவது....

ஆழ்ந்த இரங்கல்:

அதுவும் ஒரு சாதனைதான் என்பார்கள்! சேலத்தில் தமிழக பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் வி. ரமேஷ் என்பவர் 19.7.2013 அன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் படுகொலையை கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, மறைந்த ரமேஷ் அவர்களின் குடும் பத்தினருக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடரும் அரசியல் கொலைகள்:

அரசியல் கொலைகள் தொடர்ந்து கொண்டே போகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ கத்தில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் ஆறு பேர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட் டுள்ளார்கள். 4-7-2012 இல் நாகையில் பா.ஜ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்ப வரும், 23-10-2012இல் வேலூரில் பா.ஜ.க. மருத் துவ அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி என்பவரும், 19-3-2013 அன்று பரமக்குடி நகராட்சி பா.ஜ.க. முன்னாள் கவுன்சிலர் முருகன் என்பவரும், 1-7-2013 அன்று வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளை யப்பன் என்பவரும், 8-7-2013 அன்று ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு என்பவரும், தற்போது சேலத்தில் பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் என்பவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் கள்.

காயமடந்தவர்கள்:

நாகர்கோவிலில் பா.ஜ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி, மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். மாவட்டச் செயலாளர் ஆனந்த், ஊட்டியில் இந்து முன்னணி நிர்வாகி ஹரி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டு உயிர் பிழைத்தனர். இந்தச் செய்தி தினமணி நாளிதழிலேயே முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ராமஜெயம் படுகொலை:

திருச்சியில் ராமஜெயம் படுகொலை செய்யப் பட்டு எத்தனையோ மாதங்களாகிவிட்டன. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கொலை செய்யப்பட்டு வரு கிறார்கள். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படு வதற்கோ, நடவடிக்கை எடுப்பதற்கோ ஆட்சி யாளர்களுக்கு நேரம் இருப்பதாகத் தெரிய வில்லை. நாள்தோறும் நடைபெறும் கொலை களும், கொள்ளைகளும், சட்டம் - ஒழுங்கு தொடர்ந்து சரிந்து சாய்ந்து கொண்டிருப்பதையே காட்டுகின்றன என இவ்வாறு அந்த கேள்வி பதில் அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
The DMK president Karunanithi has condemned the BJP's state secretary auditor Ramesh's murder and said that the law and order in the state has been questioned in ADMK government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X