For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விக்கிமீடியாவுடன் சேர்ந்து 'ப்ரீ' விக்கிபீடியா ஆக்சஸ் அளிக்கும் ஏர்செல்

By Siva
Google Oneindia Tamil News

Aircel-Wikimedia foundation deal: Customers to have free access to Wikipedia
சான் பிரான்சிஸ்கோ/டெல்லி: செல்போன்களில் கட்டணமில்லாமல் விக்கிபீடியாவை பார்க்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏர்செல் நிறுவனம் விக்கமீடியா பவுன்டேஷனுடன் கைகோர்த்துள்ளது.

ஏர்செல் நிறுவனம் விக்கிமீடியா பவுன்டேஷனுடன் சேர்ந்து தனது வாடிக்கையாளர்கள் செல்போனில் கட்டணமில்லாமல் விக்கிபீடியாவை பார்க்க வசதி அளிக்கவிருக்கிறது. செல்போனில் இன்டர்நெட்டை பயன்படுத்துவோரை குறி வைத்துள்ளது விக்கிமீடியாவின் விக்கிபீடியா ஜீரோ புரோகிரம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தான் விக்கிமீடியா ஏர்செல்லுடன் கைகோர்த்துள்ளது.

இந்த ஏர்செல்-விக்கிமீடியா ஒப்பந்தத்தின் மூலம் விக்கிபீடியாவுக்கு 60 மில்லியன் புதிய யூசர்கள் கிடைப்பார்கள்.

இது குறித்து ஏர்செல் நிறுவன சிஎம்ஓ அனுபம் வாசுதேவ் கூறுகையில்,

விக்கமீடியா பவுன்டேஷனுடன் கைகோர்த்துள்ளது கூடுதல் வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் சேவையை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வை மேம்படுத்த கட்டணமில்லாமல் தகவலும் அளிக்க உதவுகிறது. இந்த புதிய ஒப்பந்தத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதன் மூலம் எங்களின் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று நம்புகிறோம் என்றார்.

இது குறித்து விக்கமீடியாவின் மொபைல் பிரிவு தலைவர் குல் தகானோ வாத்வா கூறுகையில்,

தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கட்டணமில்லாமல் தகவல்களை அளிக்க முன்வந்துள்ள ஏர்செல் நிறுவனத்தின் முயற்சியை பாராட்டுகிறோம். இந்த ஒப்பந்தம் மூலம் முதன் முதலாக நாங்கள் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களை அணுகவிருக்கிறோம் என்றார்.

ஏர்செல் வாடிக்கையாளர்கள் விக்கபீடியாவை ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் 17 இந்திய மொழிகளில் பார்க்கலாம்.

இளம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்க ஏர்செல் முயற்ச்சி செய்து வருகிறது. அண்மையில் ஏர்செல் தனது வாடிக்கையாளர்களுக்கு பாக்கெட் இன்டர்நெட் ஸ்மார்ட், பாக்கெட் இன்டர்நெட் 24 உள்ளிட்ட சேவைகளை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Aircel and the Wikimedia Foundation today announced a partnership to offer Wikipedia on mobile phones without any data charges to Aircel customers. The alliance is aimed at making knowledge available on Wikipedia accessible to all Aircel customers in both rural and urban areas for free. This is the first service of its kind to formally launch in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X