For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரேசிலில், இறகுகளால் ஆன இந்திய தலைப்பாகையை அணிந்து மகிழ்ந்த போப் பிரான்சிஸ்

Google Oneindia Tamil News

Pope dons Indian headdress after Brazil speech
ரியோ டி ஜெனிரோ: இந்தியர் ஒருவர் அளித்த பறவை இறகுகளால் ஆன தலைப்பாகையை அணிந்து இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் போப் பிரான்சிஸ்.

பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோ நகரில் நடை பெற்ற உலக இளைஞர் தின விழாவிற்கு தலைமை தாங்க வந்த போப் பிரான்சிஸ், அங்கு வாழும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் ஆகியோர் இடையே நேற்று சொற்பொழிவு ஆற்றினார்.

பின்னர், அங்கிருந்த ஒவ்வொருவராக அழைத்து ஆசி வழங்கினார். அப்போது போப்பிடம் வாழ்த்து பெற சில இந்தியர்களும் மேடையேறினர். வெறும் உடம்புடன் பாசிமாலைகளை அணிந்து, காது மற்றும் மூக்கில் பழங்கால அணிகலன்களை அணிந்து வந்த இந்தியர் ஒருவர் தனது தலைப்பாகையை போப்பிடம் அளித்து அதை அணிந்துக்கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

உடனடியாக மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், அவரது தலைப்பாகையை வாங்கி அணிந்து கொண்ட போப், அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.

English summary
Pope Francis has delighted a crowd in Rio de Janeiro by donning a colorful Indian headdress handed to him by a member of a Brazilian tribe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X