For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்வீடன் ரஷ்ய தூதரகத்தில் அத்துமீறி நுழைந்த ‘டாப்லெஸ்’ பெண்கள் கைது

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில், ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு கேட்டு ரஷ்ய தூதரகத்தில் மேலாடை இன்றி நுழைந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

ரஷ்யாவின் உக்ரைன் பகுதியில் இயங்கிவரும் ஃபெமன் என்ற பெண்ணிய அமைப்பைச் சேர்ந்த இரு பெண் ஆர்வலர்கள் நேற்று, ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் இருக்கும் ரஷ்யத் தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர்.

Topless activists enter Russian embassy in Sweden

வானவில் நிறக் கொடிகளை கையில் ஏந்தியபடி வந்த இவர்கள், மேலாடை எதுவும் அணியாததால் அங்கிருந்த ஊழியர்களும், காவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ரஷ்ய மண்ணில் வாழும் ஓரினச் சேர்க்கையாளார்களுக்கு ஆதரவாக, ‘ஓரினச் சேர்க்கையாளார்கள் உரிமையும் மனித உரிமையே' என இவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவலர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். தங்கள் தவறுகளை அவர்கள் ஒத்துக் கொண்டதால், மன்னித்து விடுவிக்கபப்ட்டனர்.

ரஷ்யாவில் ஓரினச்சேர்க்கையாளார்கள் ஒன்ரு சேர்ந்து ஊர்வலம் நடத்தினாலோ, இளம் பருவத்தினருக்கு ஓரினச்சேர்க்கையாளார்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தாலோ அபராதம் விதிக்கப்படும் வழக்கம் உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இந்தப் பெண்கள் தூரகத்திற்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர்.

English summary
Two topless activists climbed over a fence into the Russian embassy in Stockholm on Thursday to protest against the country's anti-gay bill and stigmatization of homosexuals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X