For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருமகளை ‘மகளாக’ பாவித்த மாமனார்: ‘தோலை’ தானமாகக் கொடுத்து உயிர் காத்த அபூர்வம்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: தீக்காயத்தால் பாதிக்கப் பட்ட தனது மருமகளின் உயிரைக் காக்க, தனது தோல் பகுதியைக் கொடுத்த மாமனாரைக் கண்டு மருத்துவர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.

திருமணமாகிப் போனாலே, மாமனார், மாமியார் கொடுமை நிச்சயம் என அஞ்சும் பெண்களுக்கு, இச்சம்பவம் ஹிம்மத் சின்ஹ் போன்ற சில நல்ல மாமனார்கள இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது.

அகமதாபாத்தில் ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் மோனிகா ரதோட் (26). கடந்த மே மாதம் 26ஆம் தேதி தனது வீட்டில் மதிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார் மோனிகா. அப்போது அடுப்பில் மண்ணெண்ணெய் தீர்ந்து விடவே, சமையல் செய்யும் அவசரத்தில் அடுப்பை நிறுத்தாமலேயே மண்ணெண்ணேயை அடுப்பில் ஊற்றியுள்ளார் மோனிகா.

இதில் எதிர்பாராவிதமாக அடுப்பு வெடித்து சிதறி தீவிபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய மோனிகாவிம் முன்பக்க உடல் முழுவதும் தீக்காயம் ஆனது. அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால், அது தோல் மாற்றுச் சிகிச்சை மூலமே சாத்தியம் என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.

உடனடியாக, தனது மருமகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது தோலைத் தானமாகத் தர அவரது மாமனார் ஹிம்மத் சின்ஹா முன் வந்தார். இதைக்கேட்ட மருத்துவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். பின்னர் ஹிம்மத் தின் தொடைத் தோல் பகுதியை எடுத்து, மோனிகாவின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் மருத்துவர்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தோல் மாற்று அறுவைச் சிகிச்சை மருத்துவர் விஜய் பாட்டியா கூறுகையில், ‘எத்தனையோ அறுவை சிகிச்சைகளைத் தான் செய்திருந்தபோதிலும், மாமனார் மருமகளுக்காக சிகிச்சைக்கு உட்படுவது இதுவே முதன் முறையாகும்' என்றார்.

மாமனாரின் தானம் குறித்து அறிந்த மோனிகா, தனக்கு ஏற்பட்ட துன்பத்திலும், இத்தகைய மாமனார் கிடைத்திருப்பது குறித்து மிகவும் மகிழ்வதாக தெரிவித்துள்ளார்.

விவசாயியான ஹிம்மத், மூத்த மருமகளான மோனிகாவை தன் மகளாக பாவித்ததினாலேயே, அவ்ரது உயிரைக் காப்பாற்ற இத்தகைய உதவி செய்ய முன்வந்ததாக கூறியுள்ளார்.

English summary
Himmatsinh Rathod, donated large grafts of skin from his thighs so that his eldest daughter-in-law could survive the burns she had sustained while cooking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X