For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை… சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், இறக்கையுடன் கூடிய தேவதை போன்ற உருவம் நள்ளிரவில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரவு நடந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கேமராவில் பதிவானது உண்மையிலேயே தேவதையா அல்லது கிராபிக்ஸ் வேலையா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

வெள்ளை நிற உடையில், மிகவும் பிரகாசமான இறக்கையுடன் கூடிய உருவம் மேலிருந்து சடாரென கீழே வந்து சாலையில் இறங்கி பின்னர் அதே வேகத்தில் பறந்து போய் விடுவதாக அந்தக் காட்சியில் பதிவாகியுள்ளது.

இது தேவதைதான் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் இது கப்சா வேலை, கிராபிக்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று நம்பிக்கை இல்லாதவர்கள் தெரிவிக்கிறார்கள்.

“Angel” caught on tape in Jakarta

அந்த தேவதை தரையில் இறங்கி பின்னர் மின்னல் வேகத்தில் மேலே எழும்பி பறந்து போவதைப் பார்த்து சாலையில் சென்ற சிலர் வேகமாக ஓடி வருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரே ஒரு விநாடிதான் அந்த தேவதை காட்சி தந்தது. ஆனால் அந்த ஒரு விநாடியிலும் கூட தேவதை முழுமையாக காட்சி கொடுத்துள்ளது.

இந்த வீடியோ 2011ல் பதிவானதாக இருந்தாலும் தற்போதுதான் இது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.

கேமராவில் பதிவான வீடியோ

<center><center><iframe width="480" height="360" src="//www.youtube.com/embed/oDubUuplR5g" frameborder="0" allowfullscreen></iframe></center></center>

English summary
A luminous apparition tumbling to the ground and then soaring up again has been caught on a closed circuit television video at a supermarket in Jakarta. Mystics are claiming it to be an angel. A luminous apparition tumbling to the ground and then soaring up again has been caught on a closed circuit television video at a supermarket in Jakarta. Mystics are claiming it to be an angel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X