For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 ஆண்டுகளில் உலகளவில் நடந்த 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துகள்...!

Google Oneindia Tamil News

சென்னை: உலகஅளவில் கடந்த பத்து ஆண்டுகளில் 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கள் நடந்துள்ளன.

இவற்றில் 19 விபத்துக்கள் பெரிய அளவிலானவை.

இந்த 22 விபத்துக்களில் பெரும்பாலானவை அமெரிக்காவைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகும்.

பாறையில் மோதிய யுஎஸ்எஸ் மின்னபோலிஸ்

பாறையில் மோதிய யுஎஸ்எஸ் மின்னபோலிஸ்

அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யுஎஸ்எஸ் மின்னபோலிஸ்-செயின்ட் பால் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல், கடந்த 2006ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. பாறையில் சிக்கி மோதியது அந்தக் கப்பல்.

தமர் ஆற்றில்

தமர் ஆற்றில்

பிளைமவுத் அருகே தமர் நதியில் போய்க் கொண்டிருந்தபோது இது விபத்தில் சிக்கியது. மனித் தவறே இதற்குக் காரணம் என்று சமீபத்தில் கூறப்பட்டது.

9 அமெரிக்க்க கப்பல்கள்

9 அமெரிக்க்க கப்பல்கள்

கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த 22 விபத்துக்களில் 9 விபத்துக்கள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சந்தித்தவை ஆகும்.

5 ரஷ்யக் கப்பல்கள்

5 ரஷ்யக் கப்பல்கள்

ரஷ்யாவைச் சேர்ந்த 5 நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த காலகட்டத்தில் விபத்தை சந்தித்துள்ளன.

5 இங்கிலாந்துக் கப்பல்கள்

5 இங்கிலாந்துக் கப்பல்கள்

இதுதவிர நான்கு இங்கிலாந்துக் கப்பல்கள், சீனா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த தலா ஒரு கப்பலும் விபத்தை சந்தித்துள்ளன.

தரை தட்டிய இங்கிலாந்துக் கப்பல்

தரை தட்டிய இங்கிலாந்துக் கப்பல்

இங்கிலாந்தின் எச்எம்எஸ் அஸ்டிடியூட் என்ற நீர்மூழ்கிக் கப்பல் அக்டோபர் 1ம் தேதி ஸ்கை என்ற இடத்தில் தரை தட்டியது.

கப்பலுக்குள் ஒரு கொலை

கப்பலுக்குள் ஒரு கொலை

சில மாதங்களுக்குப் பின்ன்னர் இக்கப்பலுக்குள் ஒரு பயங்கரம் நடந்தது. அதாவது 36 வயதான லெப்டினென்ட் கமாண்டர் இயான் மொலினெக்ஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கப்பல் ஊழியர் ரியான் டோனவன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 ஊழியர்களைக் கொல்ல முயன்றதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

2003ல் மூழ்கிய மிங் 361

2003ல் மூழ்கிய மிங் 361

2003ம் ஆண்டு மிங் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியது. இது சீனக் கப்பலாகும். அதில் கப்பலில் இருந்த 70 பேரும் உயிரிழந்தனர். சீன வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மோசமான விபத்தாகும் இது.

ரஷ்யாவின் நெர்பா

ரஷ்யாவின் நெர்பா

2008ம் ஆண்டு ரஷ்யாவின் கே 152 நெர்பா என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த போர்க் கருவிகள் திடீரென வெடித்ததால் 14 சிவிலியன் பணியாளர்கள் உயிரிழந்தனர். 21 கடற்படை வீரர்கள் காயமடைந்தனர்.

விலாடிவாஸ்டாக் சம்பவம்

விலாடிவாஸ்டாக் சம்பவம்

ரஷ்யாவின் விலாடிவாஸ்டாக்கில் நடந்த ஒரு சம்பவத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 21 பேர் விஷத் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.

English summary
Nineteen major naval accidents have taken place over the past decade, involving 22 submarines. The majority have involved American submarines. The USS Minneapolis-St Paul became dangerously close to grounding on rocks in the River Tamar near Plymouth, Devon, and a new report has blamed human failings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X