For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ரக்‌ஷாபந்தன்’ பரிசாக தங்கைக்கு செல்போன்: அண்ணனுக்கு உத்தரவிட்ட டெல்லி கோர்ட்

Google Oneindia Tamil News

Raksha Bandhan
டெல்லி: இன்றும் நாளையும் உலக்மெங்கும் சகோதரப் பாசத்தை வெளிப்படுத்தும் ரக்‌ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், ஒரு வழக்கில் தங்கைக்கு ரக்‌ஷாபந்தன் பரிசாக செல்போன் வாங்கித்தரச் சொல்லி அண்ணனுக்கு உத்தரவிட்டுள்ளார் டெல்லி நீதிபதி ஒருவர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வரும் மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில் தான் நீதிபதி ஹிமா ஹோக்லி இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.

தனது சகோதரர் உட்பட தன் குடுமப்த்தினர் தொடர்ந்து தனக்கு மனரீதியாகவும், உடல் நீதியாகவும் துன்புறுத்தல் தருவதாகவும், இதனால் தனது மேற்படிப்பு பாதிக்கப் பட்டுள்ளதாவும் அம்மாணவி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, தற்போது 22 வயதாகும் அப்பெண்ணை, அவளாக ஏற்றுக் கொள்ளும் வரை இனி திருமணம் செய்து கொள்ளக் கூறி வற்புறுத்தக்கூடாது என வலியுறுத்தியது. மேலும், அண்ணன், தங்கை ஆகிய இருவருக்கிமிடையே நடைபெற்ற வாக்குவாத்தைல் உடைந்து போன செல்போனிற்கு பதிலாக ரக்‌ஷாபந்தனான இன்று புதிய போன் ஒன்று வாங்கி பரிசளிக்க அறிவுறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அம்மாணவியின் பெற்றோர் அப்பெண்ணின் மேற்படிப்புக்கும், அதனைத்தொடர்ந்து அவள் விரும்பினால் வேலைக்குச் செல்லவும் உதவுவதாக வாக்குருதி அளித்தனர்.

English summary
The judiciary has time and again come to the rescue of girls facing threats from family members to sacrifice education midway to get married. This time, however, in an unprecedented move while protecting one such college girl, the Delhi high court has directed the brother to gift her a mobile phone this 'Raksha Bandhan' in case of any emergency in future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X