For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிவிட்டரில் சாய்னாவுடன் ஜுவாலா கட்டா குடுமிபிடி சண்டை!

டெல்லி: முன்னாள் பேட்மிண்டன் வீரர் தௌபீக் ஹிதாயத் தொடர்பாக சாய்னா நேவால் தெரிவித்த கருத்துக்களுக்கு சக வீராங்கனையான ஜுவாலா கட்டா கடும் அதிருப்தி தெரிவித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் ஹிதாயத் தொடர்பாக இருவரும் மோதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை சாய்னா, ஜுவாலா இடையே எந்தவிதமான பகிரங்கமான மோதலும் ஏற்பட்டதில்லை. ஆனால் முதல் முறையாக சாய்னாவை பகிரங்கமாக, அதேசதமயம், அவரது பெயரைக் குறிப்பிடாமல் சாடியுள்ளார் ஜுவாலா.

முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் ஹிதாயத்

முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் ஹிதாயத்

ஹிதாயத் முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் ஆவார்.

பெரிய விலைக்கு ஏலம் போகவில்லை

பெரிய விலைக்கு ஏலம் போகவில்லை

சமீபத்தில் நடந்த இந்தியன் பேட்மிண்டன் லீக் வீரர்கள் ஏலத்தில் இவருக்குப் பெரிய விலை போகவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்தார் ஹிதாயத்.

ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸ்

ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸ்

ஹிதாயத் ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே அணியின் நட்சத்திர வீராங்கனையாக சாய்னா நேவால் இருக்கிறார்.

விலை போகாததற்கு என்ன காரணம்

விலை போகாததற்கு என்ன காரணம்

ஹிதாயத் அதிக விலைக்கு ஏலம் போகாதது குறித்து சாய்னா கருத்து தெரிவித்திருந்தார். அதில், தான் ஓய்வு பெற்றதை முதலில் ஹிதாயத் உணர வேண்டும். எனவே பெரிய விலைக்கு வாய்ப்பிலலை என்பதையும் உணர வேண்டும்.

பெரிய ஆள்தான்...

பெரிய ஆள்தான்...

ஹிதாயத் நிச்சயம் பெரிய வீரர்தான். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் தனக்கு என்ன கிடைத்துள்ளதோ அதைக் கொண்டு திருப்திப்படுவதே சிறந்தது. உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவே ஐபிஎல் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார் சாய்னா.

அதெப்படி அப்படிச் சொல்லலாம்...

அதெப்படி அப்படிச் சொல்லலாம்...

இதைப் பார்த்து வெகுண்டெழுந்து விட்டார் ஜுவாலா. டிவிட்டரைப் பிடித்து அதில் தனது கருத்தைப் போட்டுள்ளார்.. சற்று காரசாரசமாக.

சாய்னா பேச்சு தப்பு

சாய்னா பேச்சு தப்பு

அதில் அவர் கூறுகையில், ஹிதாயத் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர். அவர் ஓய்வு பெற்று விட்டர் என்று எப்படி அவரை ஓரம் கட்ட முடியும். அவரது கருத்துகளுக்கும், விருப்பத்திற்கும் மதிப்பளிக்காமல் போக முடியுமா... விளையாட்டில் நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் பரவாயில்லை. உங்களது சக வீரர்கள், வீராங்கனைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமல்லவா... யாரும் ஹிதாயத் குறித்து இப்படிப் பேசுவது சரியல்ல. அவருக்கு உரிய மரியாதை தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது அவருக்கு்க கொடுக்கப்படவில்லை. ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

மரியாதை.. மரியாதை..

மரியாதை.. மரியாதை..

நான் இங்கு பணம் பற்றிப் பேசவில்லை. ஓய்வு என்று சொல்லி யாரையும் மதிப்புக் குறைத்துப் பார்க்கக் கூடாது. மரியாதையும், கெளரவமும்தான் இங்கு முக்கியம். பணம் அல்ல.

லாராவைப் பற்றி இப்படிப் பேசுவாரா டோணி

லாராவைப் பற்றி இப்படிப் பேசுவாரா டோணி

லாரா ஓய்வு பெற்று விட்டார் என்பதற்காக அவரை குறைத்துப் பேசுவாரா டோணி... சக வீரர்கள் ஒருவரை ஒருவர் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். குறைத்து மதிப்பிடக் கூடாது. உங்களுக்கு அவருடன் உடன்பாடு இல்லையா, குறைந்தபட்சம் அவரை தாழ்த்திப் பேசுவதையாவது நிறுத்தி விடுங்கள். அவர் செய்த சாதனைகளை மறந்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார் ஜுவாலா.

ஜுவாலா பத்த வச்சுட்டாரு.. எங்க போய் இது முடியப் போகுதோ...!

Story first published: Thursday, August 22, 2013, 8:14 [IST]
Other articles published on Aug 22, 2013
English summary
Top Indian doubles player Jwala Gutta took a dig at Saina Nehwal for differing with Indonesian great Taufik Hidayat on the auction of players in the Indian Badminton League (IBL). Former Olympic and World Champion Hidayat was unhappy over the way the overseas players were bought at their base price when their less experienced Indian counterparts went for much higher amounts.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X