For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்களால் தலைகீழாக நிற்க முடியும்.. ஆனால் இப்படி செஸ் விளையாட முடியுமா..?

Google Oneindia Tamil News

கோவில்பட்டி: கோவில்பட்டியில் செஸ் பயிற்சியாளர் ஒருவர் தலைகீழாக ஒருமணிநேரம் தொங்கியபடி செஸ் விளையாடினார்.

இவர் செஸ் பயிற்சியாளர் மட்டுமல்ல யோகாசன மாஸ்டரும் கூட. ஸ்கேட்டிங் கழகத்தில் செஸ் பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

இவரது சாதனை செஸ் விளையாட்டு விழா கோவில்பட்டியில் நடந்தது.

தங்கமாரியப்பன்

தங்கமாரியப்பன்

வில்லிசேரி ஷீரடி சாய்பாபா ஞானத்திருக்கோவில் சக்திபாலா அறக்கட்டளை சார்பில், கோவில்பட்டி சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் செஸ் பயிற்சியாளர் தங்கமாரியப்பன் தழைலகீழாக கயிற்றில் தொங்கியபடி செஸ் விளையாடும் சாதனை விழா நடந்தது.

எம்.எல்.ஏ தலைமமையில்

எம்.எல்.ஏ தலைமமையில்

விழாவிற்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார். வில்லிசேரி ஷீரடி சாய்பாபா கோவில் நிறுவனர் வேலுச்சாமி, தொழிலதிபர் துரைராஜ், தலைவர் ராமசந்திரன், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவசங்கரி வரவேற்றார்.

ஒரு மணிநேரம் தலைகீழாக செஸ்

ஒரு மணிநேரம் தலைகீழாக செஸ்

விழாவில், சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் செஸ் பயிற்சியாளர் தங்கமாரியப்பன் தழைலகீழாக கயிற்றில் தொங்கியபடி 1மணி நேரம் செஸ் விளையாடி சாதனை புரிந்தார். இதனைக்கண்ட பார்வையாளர்கள் வியப்பு அடைந்ததுடன் அவரை வெகுவாக பாராட்டினர்.

ஏராளமானோர் திரண்டு வந்து பாராட்டு

ஏராளமானோர் திரண்டு வந்து பாராட்டு

விழாவில், கோவில்பட்டி முன்னாள் நகரகழக செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், தொகுதி கழக இணைசெயலாளர் சீனிவாசன், யோகா பயிற்சியாளர்கள், மாணவ, மாணவியர்கள், தங்கமாரியப்பன் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் பயிற்சியாளர்கள் மற்றும் அங்கு யோகா பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்கள் இதுபோன்ற பல்வேறு வகையான சாதனை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

English summary
A yoga master played chess upside down in Kovilpatti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X