For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாய்னா உதவியால் ஹைதராபாத் அதிரடி... முதலாவது ஐபிஎல் கோப்பையை வென்றது

மும்பை: முதலாவது இந்தியன் பேட்மிண்டன் லீக் தொடரை சாய்னா நேவால் தலைமையிலான ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸ் அணி வென்றுள்ளது.

சாய்னா மற்றும் அஜய் ஜெயராம் ஆகியோர் பெற்றுத் தந்த வெற்றிகளால் ஹைதராபாத் அணிக்கு சாம்பியன் கோப்பை கிடைத்தது.

மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி, லக்னோவின் அவாதே வாரியர்ஸ் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது.

இறுதியில் மூன்று வெற்றிகள்

இறுதியில் மூன்று வெற்றிகள்

இறுதிப் போட்டியில் சாய்னா நேவால், அஜய் ஜெயராம் ஆகியோர் ஒற்றையர் பிரிவிலும், கோ வி ஷெம், லிம் கிம் வா இணை இரட்டையர் போட்டியிலும் வென்றன.

ஒரு போட்டியில் லக்னோ வெற்றி

ஒரு போட்டியில் லக்னோ வெற்றி

முன்னதாக லக்னோ அணியின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஆடவர் ஒற்றையர் போட்டியில் ஹைதராபாத் அணியின் டனோங்சாக் சயீன்சோம்பூன்சுக்கை வீழ்த்தி தனது அணிக்கு வெற்றி தேடித் தந்தார். ஆனால் அடுத்து வந்த 3 போட்டிகளிலும் லக்னோ தோற்றுப் போய் விட்டது.

சிந்துவை 2வது முறையாக வீழ்த்திய சாய்னா

சிந்துவை 2வது முறையாக வீழ்த்திய சாய்னா

மகளிர் ஒற்றையர் பிரிவில் லக்னோவின் பி.வி.சிந்துவுடன் சாய்னா மோதினார். அனல் பறக்க நடந்த இப்போட்டியில் சாய்னா 36 நிமிடங்களில் வெற்றியைப் பெற்றார். சிந்துவை அவர் 2வது முறையாக இத்தொடரில் அவர் வீழ்த்தியுள்ளார்.

தொடர் நாயகி

தொடர் நாயகி

இந்தத் தொடரில் ஒரு தோல்வியைக் கூட சாய்னா சந்திக்கவில்லை. மொத்தம் 7 வெற்றிகளைப் பெற்ற அவர் தொடரின் நாயகியாகவும் அறிவிக்கப்பட்டார்.

ரூ. 3.25 கோடி பரிசு

ரூ. 3.25 கோடி பரிசு

வெற்றி பெற்ற ஹைதராபாத் அணிக்கு ரூ. 3.25 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Story first published: Sunday, September 1, 2013, 12:28 [IST]
Other articles published on Sep 1, 2013
English summary
The Hotshots beat the Lucknow-based Awadhe Warriors 3-1 in the final to clinch world's richest badminton league trophy. Led by their icon player Saina Nehwal, the Hyderabad Hotshots won the inaugural Indian Badminton League (IBL) title at the National Sports Club of India (NSCI) here on Saturday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X