For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத்தீவு குறித்து தமிழகத்துடன் பேசியிருக்க வேண்டாமா... மத்திய அரசுக்கு 'ஞானம்' கண்டனம்!

Google Oneindia Tamil News

Gnanadesikan
சென்னை கச்சத்தீவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்வதற்கு முன்பு மத்திய அரசு தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது தவறு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டால் தமிழர்களுக்கு பாதகம் ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மத்திய அரசு, தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது தவறுதான். கச்சத்தீவை நீண்ட கால குத்தகைக்கு எடுப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதே மத்திய அரசின் நிலைபாடு. சேது சமுத்திர திட்டத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்றார் அவர்.

English summary
TNCC president Gnanadesikan has said that the centre should have consulted TN parties before it submitted its report in SC on Kachatheevu issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X