For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டு...ஓட்டு.. ஓட்டு...ரூ7860 கோடியில் வருது ஏழை மக்களுக்கு இலவச செல்போன், ஐபேட் !!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ஏழை மக்களின் வாக்குகளை கைப்பற்ற நாடு முழுவதும் கிராமப்புற ஏழை மக்களுக்கு ரூ.7860 கோடி செலவில் 2.5 கோடி செல்போன், 90 லட்சம் ஐபேடு ஆகியவற்றை இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாக்குகளை கைப்பற்றும் வகையில் ‘உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி எல்.பி.ஜி சிலிண்டர்களுக்கான மானியத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதுவும் வாக்குகளை குறிவைத்தே அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அடுத்த அஸ்திரமாக செல்போன், லேப்டாப், ஐபேட் ஆகியவைகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. கூடவே 30 நிமிடம் டாக் டைம், 30 எஸ்எம்எஸ், 30 எம்பி இணையம் ப்ரீ என்றும் அறிவிக்க உள்ளது.

ரூ. 7860 கோடி செலவில்

ரூ. 7860 கோடி செலவில்

ரூ.7860 கோடி செலவில் நாடுமுழுவதும் உள்ள கிராமப்புற ஏழை மக்களுக்கு 2.5 கோடி செல்போன், 90 லட்சம் டேப்ளட் எனப்படும் ஐபேடு ஆகியவற்றை வழங்க திட்டமிட்டுள்ளது. 2014-15ம் ஆண்டில் தொடங்கி அடுத்த 4 ஆண்டுகளுக்கு இதனை வழங்க ஆலோசித்து வருகிறது.

இலவச இணைப்பு

இலவச இணைப்பு

இந்த திட்டத்தின் படி இலவச மொபைல் போன்கள் அனைத்தும் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மட்டும் வழங்கப்படும் மொபைல் போன்களுக்கு 2 ஆண்டுகளுக்கு இலவச இணைப்பும் வழங்கப்படும். பயனாளிகள் ஒருமுறை ரூ.300 செலுத்தினால், 30 நிமிடம் டாக் டைம், 30 எஸ்எம்எஸ், 30 எம்பி இணையம் ப்ரீ என்கிற அதிரடி அறிவிப்பும் வெளியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலவச இணைப்பு

இலவச இணைப்பு

இந்த திட்டத்தின் படி இலவச மொபைல் போன்கள் அனைத்தும் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மட்டும் வழங்கப்படும் மொபைல் போன்களுக்கு 2 ஆண்டுகளுக்கு இலவச இணைப்பும் வழங்கப்படும். பயனாளிகள் ஒருமுறை ரூ.300 செலுத்தினால், 30 நிமிடம் டாக் டைம், 30 எஸ்எம்எஸ், 30 எம்பி இணையம் ப்ரீ என்கிற அதிரடி அறிவிப்பும் வெளியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம்

பி.எஸ்.என்.எல் நிறுவனம்

மத்திய அரசு சார்பில் இந்த செல்போன் மற்றும் ஐபேடு வினியோகப்பணிகளை பிஎஸ்என்எல் செய்யும் எனக் கூறப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.395 கோடியில் 25 லட்சம் செல்போன்களும், ரூ.772.5 கோடியில் 15 ஐபேடுகளும் வழங்கப்படும். படிப்படியாக 4 ஆண்டுகளில் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

மாணவர்களுக்கு ஐபேடு

மாணவர்களுக்கு ஐபேடு

அதே நேரத்தில் ஐபேடுகளை கிராமம் மற்றும் நகர்ப்புற 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட வரைவை தொலைத்தொடர்பு ஆணையம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதும் இது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று பணிகள் விரைந்து தொடங்கும் என தெரிகிறது.

இலவச டாக்டைம்

இலவச டாக்டைம்

மாணவர்கள் தங்களது ஐபேடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு 75 நிமிடம் டாக்டைம், 75 எஸ்எம்எஸ், 500 எம்பி டேட்டாக்களை இலவசமாக பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்குகளை குறிவைத்து காங்கிரஸ் எறியும் இலவச அஸ்திரம் சாதகமாக அமையுமா? என்பது லோக்சபா தேர்தலில் தெரியவரும்.

English summary
In another mega scheme to woo the poor, the Centre proposes to spend Rs 7,860 crore distributing 2.5 crore mobile phones and 90 lakh tablets virtually free of cost to targeted beneficiaries over the next four years starting 2014-15, in the name of bridging the digital divide in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X