For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘வாங்’ தேசிய பூங்காவில், தந்தங்களுக்காக ‘விஷம்’ வைத்து கொல்லப் பட்ட 41 யானைகள்: 6 பேர் கைது

Google Oneindia Tamil News

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் உள்ள தேசியப் பூங்காவில் 41 யானைகள் சயனைடு வைத்துக் கொள்ளப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 6 வன விலங்கு வேட்டையாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் உள்ள, கலஹாரி பாலைவனம் அருகே அமைந்துள்ளது புகழ்பெற்ற ‘வாங்' தேசியப்பூங்கா. இப்பூங்காவில் யானைகள், சிங்கங்கள், புலிகள் என பல விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் இந்த பூங்காவில் யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் அதிகளவில் கொல்லப்படுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெரும்பாலும் யானைகளும், காண்டாமிருகங்களும் முறையே அவைகளின் தந்தம் மற்ரும் கொம்புகளுக்காக வேட்டையாளர்களால் வேட்டையாடப் பட்டதாக கூறப்படுகிறது.

Zimbabwe elephants poisoned by poachers in Hwange

இதனடிப்படையில் மேற்கொள்ளப் பட்ட கணாக்கெடுப்பின் படி, கடந்த சில வருடங்களில் மட்டும் இப்பூங்காவில் 41 யானைகள் சயனைடு விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளார். யானைகளைக் கொன்ற கொள்ளையர்கள் அதன் தந்தங்களை வேட்டையாடி சென்று இருக்கின்றனர் என்பதை உறுதி செய்துள்ளார் வாங் பூங்காவின் செய்தித்தொடர்பாளர்.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 6 வன விலக்கு வேட்டையாளார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Poachers have used poison to kill 41 elephants in Zimbabwe's Hwange National Park, an official has told the BBC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X