For Daily Alerts
Just In
தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைவு
சென்னை: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. நேற்று மாலையுடன் முடிவடைந்த வர்த்தகத்தில் சென்னை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு ரூ.2727க்கு விற்பனையாகிவந்தது.
இன்று சனிக்கிழமை என்பதால் பாதி நாள்தான் வர்த்தகம் இருந்தது. மதியம் 1 மணியுடன் வர்த்தகம் முடிவடைந்தது. அதன்படி தங்கம் கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து காணப்பட்டது. அதாவது ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2699ஆக இருந்தது. ஒரே நாளில் பவுனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Gold rate falled by 28 rupees per gram, in Chennai market.