For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 8வது இடத்தில் இந்தியா: 14,800 பேர் "பெத்த" பணக்காரர்களாம்!

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: உலக பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.

நியூ வேர்ல்டு ஹெல்த் அமைப்பு உலகின் பெரும்பணக்காரர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை கணக்கிட்டு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ரூ. 600 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளவர்களை தான் அந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.

அந்த பட்டியலில் எந்தெந்த நாடுகள் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளன என்ற விவரம் வருமாறு,

அமெரிக்கா

அமெரிக்கா

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 500 பெரும் பணக்காரர்கள் உள்ளனர்.

சீனா

சீனா

அமெரிக்காவை அடுத்து அதிகபடியாக 26 ஆயிரத்து 600 பெரும் பணக்காரர்கள் சீனாவில் வசிக்கிறார்கள்.

ஜெர்மனி

ஜெர்மனி

சீனாவை அடுத்து ஜெர்மனியில் 25 ஆயிரத்து 400 பெரும் பணக்காரர்களும், இங்கிலாந்தில் 21 ஆயிரத்து 700 பேரும், ஜப்பானில் 21 ஆயிரம் பெரும் பணக்காரர்களும் வசிக்கிறார்கள்.

இந்தியா

இந்தியா

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் 14 ஆயிரத்து 800 பெரும் பணக்காரர்கள் உள்ளார்கள்.

ஹாங்காங்

ஹாங்காங்

பெரும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் நகரம் என்றால் அது ஹாங்காங் தான். அந்நகரில் மட்டும் 15 ஆயிரத்து 400 பேர் பெரும் பணக்காரர்களாக உள்ளனர்.

10 ஆண்டுகள்

10 ஆண்டுகள்

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை 58 சதவீதமும், பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 71 சதவீதமும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India ranks 8th on the global list of multimillionaires.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X