For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் மதிப்பு உயர்வால் பெட்ரோல் விலை கொஞ்சம் குறையலாம்.. டீசல்-கேஸ் விலை ஏறும்!

By Chakra
Google Oneindia Tamil News

Petrol may be cheaper marginally
டெல்லி: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கொஞ்சம் உயர்ந்துள்ளதையடுத்து பெட்ரோல் விலை கொஞ்சம் குறையலாம் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் டீசல், சமையல் கேஸின் விலை உயர்வதை தவிர்க்க முடியாது என்றும் தெரிகிறது.

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்தது.

ஆனால், இப்போதைக்கு தாக்குதல் ஏதும் நடக்காது என்ற தகவலால் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 112.26 டாலரில் இருந்து 110.15 டாலராகக் குறைந்துள்ளது. அதே போல இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்து வருகிறது.

இதே நிலை தொடர்ந்தால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவு கொஞ்சம் குறையும்.

இதனால் இப்போது சர்வதேச விலைக்கு ஏற்ற அளவுக்கு விற்கப்படும் பெட்ரோலின் விலையைக் குறைக்க Petroleum Planning and Analysis Cell முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது.

அதே நேரத்தில் சர்வதேச சந்தை விலையை விட குறைவான விலையில் நஷ்டத்தில் விற்கப்பட்டு வரும் டீசல், சமையல் கேஸ் மற்றும் மண்ணெண்ணெயின் விலையை உயர்த்த வேண்டும் என்று பெட்ரோலிய நிறுவனங்கள் கூறி வருகின்றன. இதை மத்திய அரசு ஏற்றால் விலை உயரும்.

English summary
There could be some good news around the corner for petrol consumers by way of a small reduction in price if the rupee remains north bound but an across-the-board hike in diesel and kitchen fuel prices appears inevitable. The price of crude mix that state refiners buy dropped to $110.15 per barrel on Tuesday from a high of $112.26 on Monday. In rupee terms, too, the price followed the trend to slide to Rs 7073.83 per barrel from Rs 7404.67. According to Petroleum Planning and Analysis Cell — an oil ministry arm that tracks the country's oil and gas consumption — the cooling sign was sparked by twin factors of fall in international oil prices in dollar terms and the rupee appreciation to Rs 64.22 to a dollar from Rs 65.96.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X