For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் கட்டண உயர்வு இன்றுமுதல் அமல்… அதிருப்தியில் பயணிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ரயில் பயண கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயண டிக்கெட்டுகளுக்கும் இந்த உயர்வு பொருந்தும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ரயில்வே அமைச்சராக இருந்த திரிவேதி, 2012 - 13ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்தார். அப்போது, சர்வ தேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப, பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கப்படுவது போல், ரயில் கட்டணத்தையும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கும், எப்.ஏ.சி., என்ற திட்டத்தை அறிவித்தார்.'இந்த திட்டம், விரைவில் அமலுக்கு வரும்' என்றும் அறிவித்தார். ஆனாலும், அதை செயல்படுத்துவதில், தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், மின்சார கட்டணம், டீசல் விலை ஆகியவை, கடுமையாக உயர்ந்த நிலையிலும், ரயில் கட்டணம் மட்டும், உயர்த்தப்படாமல் இருந்தது.கடந்த ஏப்ரலில், எப்.ஏ.சி., திட்டப்படி, ரயில்வே சரக்கு கட்டணம் மட்டும், 5.7 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.

2 சதவிகிதம் அதிகரிப்பு

2 சதவிகிதம் அதிகரிப்பு

தற்போது பயணிகள் கட்டணம் 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது. இதன்படி, படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி கட்டணங்கள், 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ரிசர்வேசன் டிக்கெட்டுகள்

ரிசர்வேசன் டிக்கெட்டுகள்

இம்மாதம், 7 மற்றும் அதற்கு பின் உள்ள தேதிகளில், படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதிகளில் பயணிப்பதற்கு, ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், உயர்த்தப்பட்ட கட்டண தொகையை, பயணத்தின்போது, டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டும்.

சீசன் டிக்கெட்டுகள்

சீசன் டிக்கெட்டுகள்

ஆனால், உள்ளுர் மின்சார ரயில் பயணத்துக்கான இரண்டாம் வகுப்பு கட்டணம் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக

இரண்டாவது முறையாக

இந்தாண்டில், பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுவது, இது, இரண்டாவது முறை. ஏற்கனவே, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், ஜனவரியில், 15 சதவீதம் உயர்த்தப்பட்டது என்பது, குறிப்பிடத்தக்கது.

துராந்தோ ரயில் கட்டணம்

துராந்தோ ரயில் கட்டணம்

ராஜதானி, சதாப்தி, ஜன் சதாப்தி, துரந்தோ, உள்ளிட்ட ரயில்களுக்கு பயணிகள் கட்டணம் உயர்கிறது. ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம்1 முதல் 300 கிமீ வரையான தூரத்துக்கு ஏ.சி 3 டயர் எனில் ரூ.477, ஏ.சி ,2 டயர் எனில் நெரிசல் காலத்தில் ரூ.677, சாதாரண நாட்களில் 655, ஏ.சி முதல் வகுப்பு எனில் நெரிசல் காலத்தில் ரூ. 1154, மற்ற நாட்களில் ரூ.1087 என இருக்கும்.

சதாப்தி எக்ஸ்பிரஸ்

சதாப்தி எக்ஸ்பிரஸ்

1 முதல் 50 கிமீ வரையான தூரத்துக்கு ஏ.சி சேர் கார் எனில் ரூ.161, எக்சிகியூட்டிவ் கிளாஸ் எனில் ரூ.368 ஜெய் சதாப்தி எக்ஸ்பிரஸ் எனில் 1 முதல் 50 கிமீ வரையான தூரத்துக்கு இரண்டாம் வகுப்பு ரூ.37, ஏ.சி சேர் கார் எனில் ரூ.163. காரிப் ரதம் ரயிலில் 1 முதல் 100 வரையான கிலோ மீட்டருக்கு ஏ.சி, சி.சி சேர் கார் எனில் ரூ.113, ஏ.சி 3 டயர் எனில் ரூ.143அதே போல சரக்கு கட்டணத்திலும் உயர்வு உள்ளது.

தூரந்தோ ரயில்கள்

தூரந்தோ ரயில்கள்

தூரந்தோ ரயில்கள் எனில் 1 முதல் 300 கிமீ வரையான தூரத்துக்கு ஏ.சி முதல் வகுப்பு ரூ.1054, ஏ.சி 2 டயர் ரூ.548, ஏ.சி 3 டயர் ரூ.324, ஏ.சி எகானமி ரூ.262.

மிக்ஸ்டு தூரந்தோ ரயில்களில் 1 முதல் 100 வரையான தூரத்துக்கு ஸ்லீப்பர் கிளாஸ் எனில் ரூ.82, ஏ.சி 3 டயர் எனில் ரூ.462, ஏ.சி 2 டயர் எனில் ரூ.668, ஏ.சி முதல் வகுப்பு எனில் ரூ.1096

இன்டர் சிட்டி தூரந்தோ ரயில்களில் 1 முதல் 100 கிமீ வரையான தூரத்துக்கு ஏசி அல்லாத சேர் கார் எனில் ரூ.57, ஏ.சி சேர் கார் எனில் ரூ.100, எக்சிகியூட்டிவ் கிளாஸ் எனில் ரூ.343

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கட் இல்லை. 5 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரை கட்டணம் வசூலிக்கப்படும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் இலவசமாக உணவு வழங்கப்படும்.

சரக்கு கட்டணமும் உயரும்

சரக்கு கட்டணமும் உயரும்

இதைத் தொடர்ந்து, சரக்கு கட்டணமும், வரும், 10ம் தேதி முதல், 1.7 சதவீதம் உயர்த்தப்படவுள்ளது. இந்த கட்டண உயர்வால், ரயில்வே துறைக்கு, 1,250 கோடி ரூபாய், வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த கட்டண உயர்வுக்கு ரயில் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

English summary
Travelling by train will become costlier from today with the revised fare structure coming into effect. Passengers will have to shell out Rs 95 more for travelling to Bangalore from Delhi in AC First Class in Rajdhani as Railways has increased the fare by about 2 per cent for all classes, including Sleeper and AC, from Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X