For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் மதிப்பு ஏற்றம்- பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்! 3 ஆண்டு இல்லாத உயர்வு!!

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் கண்டதால் 3 ஆண்டுகள் இல்லாத வகையில் மும்பை பங்குச் சந்தை உயர்ந்து காணப்பட்டது.

அமெரிக்காவின் ஷட்டவுன் முடிவுக்கு வந்த நிலையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் ரூபாய் மதிப்பு 61.22ஆக இருந்தது. இன்றைய வர்த்தகத்தின் போது இது 60.94ஆக ஏற்றம் கண்டது,

அத்துடன் சர்வதேச பங்குச் சந்தைகளிலும் ஏற்றம் இருந்தது. வங்கி மற்றும் உலோக நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு உயர்ந்ததாலே பங்குச் சந்தைகளின் புள்ளிகளும் உயர்ந்திருந்தன.

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே புள்ளிகள் ஏறுமுகமாக காணப்பட்டது. பகல் வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் புள்ளிகள் ஏறக்குறைய 350 புள்ளிகள் உயர்ந்து 20,765 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை

தேசிய பங்குச் சந்தை

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 91 புள்ளிகள் உயர்ந்து 6,137 ஆக காணப்பட்டது.

வங்கி பங்குகள் உயர்வு

வங்கி பங்குகள் உயர்வு

ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி போன்ற வங்கிகளின் பங்கு மதிப்புகள் 2.5% முதல் 4.5% வரை உயர்ந்து காணப்பட்டது.

உலோக நிறுவனங்களின் பங்குகளும் உயர்வு

உலோக நிறுவனங்களின் பங்குகளும் உயர்வு

இதேபோல் டாடா ஸ்டீல், செஸா ஸ்டெர்லைட், லார்சன் அண்ட் டூப்ரோ போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் உயர்ந்து காணப்பட்டது.

English summary
The Indian rupee on Friday gained past the 61 level against dollar on continued sell-off in the greenback across all major currencies on worries of the economic impact from the weeks-long US government shutdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X