For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோசடி வழக்கில் சாம்சங் தலைவர் சரணடைய உச்சநீதிமன்றம் 6 வார கெடு

By Mathi
Google Oneindia Tamil News

SC asks Samsung chairman to appear in court within 6 weeks
டெல்லி: மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் லீ குன் - ஹீவை காசியாபாத் நீதிமன்றத்தில் 6 வாரத்துக்குள் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாம்சங்க் தலைவர் லீ குன் ஹீ மீது ரூ8.4 கோடி மோசடி வழக்கு ஒன்று 2002ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு லீ தலைமறைவான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

மேலும் லீ யை கைது செய்யவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி லீ குன் ஹீ, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம். 6 வாரத்துக்குள் காசியாபாத் நீதிமன்றத்தில் லீ குன் ஹீ சரணடைய வேண்டும். காசியாபாத் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறுக்கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

English summary
The Supreme Court , on Wednesday, has said that Lee Kun-hee, chairman of South Korean consumer electronics company Samsung Electronics, should appear before the trial court at Ghaziabad within six weeks regarding a cheating case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X