For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி சந்தா ரசீதுகள் – ஜெ.வளர்ப்பு மகன் திருமணச் செலவு: விவரிக்கும் குன்ஹா தீர்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூர்: சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா சார்பில் ரூ.14 கோடிக்கு கணக்கு காட்டிய ‘நமது எம்ஜிஆர்' பத்திரிகையின் சந்தா தொகை ரசீதுகள் போலியானவை என்று தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் அளித்துள்ள தீர்ப்பில், 1991-96ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் ரூ.66.65 கோடி அளவுக்கு எப்படி எல்லாம் முறைகேடாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டது. அதில் சில குறிப்பிட்ட அளவுக்கான செலவு கணக்கை அவர்கள் எப்படி தவறாகவும், போலியாகவும் தயாரித்து காட்டியிருந்தார்கள் என்பதையும் நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளார்.

Fake scheme used to explain away huge money

நீதிபதி குன்ஹா தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் ரூ.14 கோடிக்கு கணக்கு காட்டிய ‘நமது எம்ஜிஆர்' பத்திரிகையின் சந்தா தொகை ரசீதுகள் போலியானவை. 1990ம் ஆண்டு முதல் ஜெயா பப்ளிகேஷன்ஸ் கூட்டாளிகளாக ஜெயலலிதாவும், சசிகலாவும் இருந்தனர். அதே ஆண்டு கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது எம்ஜிஆர்' சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.அதன்கீழ் நமது எம்ஜிஆர் நாளேட்டுக்கு ரூ.14 கோடி ஆயுள் சந்தாவாக வசூலிக்கப்பட்டது.

வருமானவரி கணக்கு

இந்த சந்தா தொகை தான் மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. மேலும் இவ்வாறு பெறப்பட்ட தொகையை வருமானவரி கணக்கிலும் ஜெயலலிதாவும், சசிகலாவும் தெரிவித்துள்ளனர். அவர்களும் அதை ஏற்று சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே இந்த ரூ.14 கோடியை சொத்துக் குவிப்பு வழக்கில் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது' என்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.

ஆதாரம் இல்லை

ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன் இந்த சந்தா திட்டம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. சந்தா பெறப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட ரசீதுகள் போலியானவை. மேலும் 1998ம் ஆண்டு தான் சந்தா தொகை பெற்றதை வருமானவரித்துறையிடம் முதன்முதலாக தாக்கல் செய்துள்ளனர்.

சசிகலாவிற்கு அதிகாரம்

ஆனால் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்ட ஆண்டுகளில் அவர்கள் அதை தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சந்தா தொகையை ஜெயலலிதா பங்குதாரராக உள்ள ஜெயா பப்ளிகேஷனுக்கு மாற்றம் செய்துள்ளார். அதற்காக சசிகலாவுக்கு பவர் ஆப் அட்டர்னி(பொது அதிகாரம்) கொடுத்துள்ளார். இதன் மூலம் ஜெயலலிதா சட்டத்திலிருந்து தப்பிக்க முனைந்துள்ளது தெரிய வருகிறது.

9000 சந்தாதாரர்கள்

மேலும், இந்த தொகை வேறு நிறுவனங்களுக்கும் மாற்றப்பட்டதுடன் அதன் மூலம் பல சொத்துக்களையும் வாங்கியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 9000 சந்தாதாரர்கள் விவரம் அனைத்தும் 2001ம் ஆண்டுக்கு பிந்தைய தேதியிட்டவை என்று தெளிவாகத் தெரிகிறது.

2012ல் திரும்ப கிடைத்த ரசீதுகள்

அந்த சந்தாவுக்கான விண்ணப்பம், பணம் கட்டிய சிலிப் காட்டப்படவில்லை. அவை காரில் கொண்டு வரப்பட்டபோது ஒரு ஓட்டல் அருகே காணாமல் போய்விட்டது என்றும் அது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த புகார் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதை வருமான வரித்துறையும் தெளிவுபடுத்தியுள்ளது. அனைத்து விண்ணப்பங்களும் பின்னர் எப்படி 2012ல் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, சந்தா தொகை தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது.

வளர்ப்பு மகன் திருமணம்

மேலும், வளர்ப்பு மகன் என்று அறிவிக்கப்பட்ட 3வது குற்றவாளியான சுதாகரனின் திருமணத்துக்கு மொத்தம் செலவிடப்பட்ட தொகை ரூ.3 கோடி என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தான் எந்த செலவையும் செய்யவில்லை. மணமகளின் குடும்பத்தினரும் அதிமுக கட்சியினருமே திருமணச் செலவை செய்தனர் என்று ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. மணமகளின் தந்தை மட்டும் ரூ.14 லட்சம் செலவு செய்ததாக ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டது.

ஜெயலலிதா செய்த செலவு

ஆனால், சுதாகரன் திருமணத்துக்கு ரூ.29.92 லட்சம் தான் செலவு செய்ததாக 1996 -1997 ஆண்டுக்காக அவர் தாக்கல் செய்த வருமானவரி தாக்கல் கணக்கில் கூறப்பட்டுள்ளது. இதில் எது சரியானது. ஜெயலலிதா எந்த செலவையும் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு செய்யவில்லையா?. எந்த செக்கையும் கொடுக்கவில்லையா?. இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஜெயலலிதாவின் ஆடிட்டர் அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

நிரூபிக்கப்பட்ட செலவு

அதிமுக தொண்டர்கள் ரூ.60 லட்சம் வரை செலவு செய்தனர் என்றால் நிச்சயம் இந்த தொகை 3 மடங்காக இருக்க வாய்ப்புள்ளது. திருமண வரவேற்பு மற்றும் காலை உணவுக்காக ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்த்தால் திருமணச் செலவு ரூ.3 கோடியைத் தாண்டியிருக்கும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

English summary
Former Chief Minister Jayalalithaa and her close aide V. K. Sasikala propped up a fictitious subscription scheme through Jaya Publications as an “afterthought” to account for Rs 14 crore of disproportionate income.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X