For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரண்ட் ஆபீசுக்கு எதிராகப் போராடுகிறவர்தானே இவர்... !!!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பூரண மதுவிலக்கு கோரி கடந்த 29 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி சசிபெருமாளை சந்திக்கச் சென்ற கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமாரைப் பார்த்து இரண்டு டெல்லி வாழ் தமிழர்கள் கரண்ட் ஆபீசுக்கு எதிராகப் போராடுகிறவர்தானே இவர் என்று விசாரித்தது அங்கு கலகலப்பை ஏற்படுத்தியது.

அணு மின் நிலைய எதிர்ப்புக் குழுவினர் தற்போது பல்வேறு தரப்பிலும் ஆதரவு திரட்டி வருகின்றனர். இவர்கள் பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

தமிழகத் தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பல தலைவர்களை இவர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி போயிருந்தார் உதயக்குமார். அங்கு அவர் போனது குறித்தும், அங்கு நடந்தது குறித்தும் தனது பேஸ்புக்கில் அவர் போட்டுள்ள சுவாரஸ்ய தகவல்.

டெல்லி விஜயம்...

டெல்லி விஜயம்...

நேற்று (ஆகஸ்ட் 27) காலை பூரண மதுவிலக்குக் கோரி கடந்த 29 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் சசிபெருமாள் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.

வேண்டுகோள்...

வேண்டுகோள்...

சசிபெருமாளிடம் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம்.

மதுவிலக்கு...

மதுவிலக்கு...

அப்போது விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி விஜயதரணியும் அங்கே வந்தார். வணக்கம் தெரிவித்துக் கொண்டு, கேரள அரசு எடுத்து வரும் மதுவிலக்கு நடவடிக்கைகள் பற்றிப் பேசிக்கொண்டோம்.

கரண்ட் ஆபிஸ்...

கரண்ட் ஆபிஸ்...

சற்று தொலைவில் சாலை ஓரம் உட்கார்ந்திருந்த இரண்டு தமிழர்கள் எங்களைப் பார்த்ததும் முகிலனிடம், "கரண்ட் ஆபீசுக்கு எதிராகப் போராடுகிறவர்தானே இவர்?" என்று விசாரித்தனர்.

English summary
The Anti nuclear protestant Su.Ba.Udhayakumar in a status in Facebook said that he was identified by 2 tamilians in Delhi as a figher against EB office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X