For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! 200 பேர் ஊடுருவ காத்திருப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மழை வெள்ளத்தை சாதகமாக்கிக் கொண்டு ஊடுருவ முயன்ற 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேர் எல்லை அருகே இந்தியாவுக்குள் ஊடுருவக் காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

காஷ்மீரில் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் 280 பேர் உயிரிழந்தனர். சுமார் 310பேரை காணவில்லை. நூற்றுக்கணக்கான வீடுகள், சாலைகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.

இவற்றை சீரமைத்து இயல்பு வாழ்க்கையை கொண்டுவரும் பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த சீரமைப்பு முயற்சியை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ எல்லையில் காத்திருக்கின்றனர்.

4 militants killed near LoC; army says 200 more waiting to cross border

சுமார் 200 பேர் வரை காத்திருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் இன்று அதிகாலை காஷ்மீர் எல்லையில் தங்தர் பகுதியில் லஷ்கர் - இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.

அவர்களை நோக்கி இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. காலை 9.30 மணி வரை துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த துப்பாக்கி சண்டையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்

English summary
Around 200 heavily armed militants were waiting across the Line of Control to infiltrate into the Indian side even as the security forces foiled several attempts by the ultras to sneak into Kashmir Valley following the recent floods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X