For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓய்வுக் காலத்திற்குத் தேவையானதைப் பற்றிய கவலை இல்லாத 78% இந்தியர்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியர்களில் 78 சதவீதம் பேர் தங்களது ஓய்வுக் காலத்தின்போது செலவழிக்கவும், பிரச்சினையின்றி வாழவும் தேவையானதை சேர்த்து வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லாதவர்களாக உள்ளனர் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

அதேசமயம், சீனாவுக்கு அடுத்து அதிக அளவில் சேமிப்பபுப் பழக்கம் கொண்டவர்கள் இந்தியர்கள்தானாம். அதாவது இந்தியர்களின் சேமிப்பு சதவீதம் 16 சதவீதமாக உள்ளது.

டவர்ஸ் வாட்சன் என்ற அமைப்பு இதுதொடர்பான ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.

பொருளாதார சிக்கல்கள்

பொருளாதார சிக்கல்கள்

உலகம் தழுவிய அளவில் பொருளாதார சிக்கல்கள், பணவீக்கம் போன்றவை இருப்பால் பலரும் ஓய்வுக் காலம் என்பதை பெரும் சிக்கலானதாக கருதுகிறார்கள்.

சீனாவில் சேமிப்பு அதிகம்

சீனாவில் சேமிப்பு அதிகம்

சீனர்களைப் பொறுத்தவரை சேமிப்பில் அவர்கள் முதலிடம் வகிக்கின்றனர். 2வது இடத்தில் இந்தியா வருகிறது. இந்தியர்களின் சேமிப்பு விகிதம் 16 சதவீதமாகும்.

சேமிக்கவே இல்லை

சேமிக்கவே இல்லை

ஓய்வுக்காலத்தின்போது அதாவது 58 வயதுக்கு மேற்பட்ட வாழ்க்கைக்குத் தேவையானதை சேமிக்கவே இல்லை என்று 78 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

வேலை பார்க்க விருப்பம்

வேலை பார்க்க விருப்பம்

சேமிப்புக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் பலரும் ஓய்வுக் காலத்திலும் பணியாற்ற அல்லது பணி நீட்டிப்புப் பெற விரும்புகிறார்களாம்.

29 சதவீதம் பேர் ஆர்வம்

29 சதவீதம் பேர் ஆர்வம்

ஓய்வுக் காலத்திற்குப் பின்னர் பணி நீட்டிப்பு பெற 29 சதவீதம் பேர் விரும்புகின்றனர். 56 சதவீதம் பேர், சேமிப்பை அதிகரிக்க விரும்புகின்றனர்.

50 வயதுக்கு மேல்தான்

50 வயதுக்கு மேல்தான்

50 வயதுக்கு மேல்தான் பலருக்கும் சேமிப்பு குறித்த ஆர்வமே வருகிறதாம்.

வீடு - பணம்

வீடு - பணம்

40 வயதுக்கு உட்பட்டோருக்கு சேமிப்பு என்றால் வீடும், கையில் நாலு காசும்தான் முக்கியமாக உள்ளதாம். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சேமிப்புதான் பிரதான கவலையாக இருக்கிறதாம்.

12 நாடுகளில்

12 நாடுகளில்

இந்த ஆய்வை 12 நாடுகளைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனங்களில் பணியாற்றும் 22,347 ஊழியர்களிடம் நடத்தியுள்ளனர்.

English summary
Notwithstanding a high savings rate of 16 per cent per annum, second only to China, around 78 per cent of Indian employees still believe they are not saving enough for a comfortable retirement, says a report by Towers Watson. According to the global professional services firm, a large number of employees are not confident of affording a long spell of retirement amid high inflationary pressures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X