For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாராவது ஓட்டு போட வர மாட்டாங்களா?: காத்திருந்த தேர்தல் அதிகாரிகள்

By Siva
|

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் அருகே உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு துவங்கி 5 மணிநேரமாகியும் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி மாலை 6 மணி வரை நடந்தது. மக்கள் பல்வேறு இடங்களில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அதே சமயம் சில இடங்களில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

இந்நிலையில் ஸ்ரீநகர் அருகே உள்ள பம்பூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. வாக்குப்பதிவு துவங்கி 5 மணிநேரத்திற்கு மேல் ஆகியும் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.

வாக்காளர்கள் யாராவது வாக்களிக்க வரமாட்டார்களா என்று எதிர்பார்த்து தேர்தல் அதிகாரிகள் காத்துக் கொண்டிருந்தனர். வாக்காளர்கள் இல்லாமல் அந்த வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

English summary
Election officials at a polling booth in Pampore near Srinagar waited for the first voter since 7 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X