For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வராத தர்மேந்திரா.. சங்கடத்தில் ஹேமமாலினி.. வம்புக்கிழுக்கும் எதிர்க்கட்சிகள்

|

ஆக்ரா: மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினியை ஆதரித்து அவரது இரு மகள்களும் தங்களது கணவர்களுடன் வந்து பிரசாரம் செய்த நிலையில், கணவர் தர்மேந்திரா வராதது ஹேமாவின் எதிர்ப்பாளர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.

தனது கணவரையே தனக்காக பிரசாரம் செய்ய வர வைக்க முடியாத ஹேமா, எப்படி மதுரா தொகுதியை சரியாக நிர்வகிக்க முடியும் என்று வம்பு பேசி வருகின்றனராம்.

ஹேமமாலினியின் தொகுதிக்கு கடைசி வரை தர்மேந்திரா பிரசாரத்திற்கே வரவில்லை. இதில் ஹேமாவுக்கே கூட லேசான மன வருத்தம்தானாம். காரணம், மதுராவில் தர்மேந்திராவுக்கும், ஹேமாவுக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளனராம். அவர்கள் தர்மேந்திரா வராததால் ஏமாற்றமடைந்துள்ளனராம்.

வருவாருன்னு சொன்னீங்களே ஹேமா...

வருவாருன்னு சொன்னீங்களே ஹேமா...

மதுராவைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான விஷ்ணு சர்மா தர்மேந்திராவின் தீவர ரசிகர். அவர் கூறுகையல், பல கூட்டங்களில் ஹேமா பேசியபோது தர்மேந்திரா நிச்சயம் வருவார என்று கூறியிருந்தார். ஆனால் கடைசி வரை வீரு -அதாவது தர்மேந்திரா - வரவில்லை. இது ஏமாற்றமாக உள்ளது என்றார்.

ஓட்டுப் போட மாட்டேன்

ஓட்டுப் போட மாட்டேன்

அதே விஷ்ணு மேலும் கூறுகையில் ஹேமாவின் மகள் இஷாவும் கூட தனது அப்பா வரவார் என்று கூறியிருந்தார். ஆனால் மொத்தத்தில் எங்களை ஏமாற்றி விட்டனர். எனவே நான் ஹேமாவுக்கு ஓட்டுப் போட மாட்டேன் என்றார்.. ஒரு ஓட்டு போச்சு போ.

குடும்பத்துல என்னவோ ..ஏதோ

குடும்பத்துல என்னவோ ..ஏதோ

நான்சி குப்தா என்பவர் கூறுகையில், தனது குடும்பமே தனக்காக பிரசாரம் செய்ததாக பெருமையுடன் கூறினார் ஹேமா. ஆனால் மகள்கள் அஹானா, இஷா மட்டும்தான் அவரது குடும்பமா.. தர்மேந்திரா இல்லையா . குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினையா என்று கேட்டார்.

பொய் சொல்லி..

பொய் சொல்லி..

ஆம் ஆத்மியைச் சேர்ந்த அனுஜ் கார்க் கூறுகையில், ஆரம்பத்திலிருந்தே பொய் புளுகி வருகிறார் ஹேமா. இப்போது அவர் அம்பலமாகி விட்டார். குடும்பத்தையே நிர்வகிக்க முடியாத அவர் எப்படி மதுராவை நிர்வகிக்க முடியும் என்றார்.

பிரச்சினை இப்படித்தான் வரும் என்று சொல்லவே முடியாது.. எப்படி வேண்டுமானாலும் வரலாம்.

English summary
Disappointed that yesteryear Bollywood actor Dharmendra had not turned up in Mathura to campaign for his wife and BJP candidate Hema Malini, 'Basanti-Veeru' fans in the constituency are now questioning the state of affairs in the actor couple's home. "Jo apna ghar nahi sambhaal sakti, woh Mathura kya sambhalegi?" (How can she manage Mathura when she cannot seem to manage her home?) a voter said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X