For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணி உடைந்தது: மோடி அமைச்சரவையில் இருந்து விலகும் சிவசேனா அமைச்சர் கீதே

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: மோடி அமைச்சரவையில் இருக்கும் சிவசேனாவைச் சேர்ந்த ஒரே அமைச்சரான அனந்த் கீதே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக, சிவசேனா இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் 25 ஆண்டு கால பாஜக, சிவசேனா கூட்டணி உடைந்தது. இதையடுத்து மோடி அமைச்சரவையில் இருக்கும் ஒரே சிவசேனா உறுப்பினரான அமைச்சர் அனந்த் கீதே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் கீதே தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.

After BJP goes alone in Maharashtra, Shiv Sena MP Anant Geete to quit Modi Cabinet

இனியும் கீதே மோடியின் அமைச்சரவையில் இருக்க மாட்டார் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மோடி அமைச்சரவையில் இருந்து விலகும் முதல் அமைச்சர் கீதே என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,

கீதே அமைச்சரவையில் தொடர்வது குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை. அவருடன் இது குறித்து ஆலோசிக்கவில்லை. இந்த விவகாரம் இன்னும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. சிவவசேனாவுடனான கூட்டணி உடைந்தது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

English summary
Anant Geete, Shiv Sena’s lone member in the Union Cabinet, will resign, party chief Uddhav Thackeray said on Monday, four days after the split in the saffron alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X