For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழிபாட்டுத் தலங்களில் ஆடுகளை பலியிட இமாச்சல் ஹைகோர்ட் அதிரடி தடை!!

By Mathi
Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் வழிபாட்டுத் தலங்களில் ஆடுகள் உள்ளிட்டவற்றை பலியிடுவதற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இமாச்சலில் இந்து வழிபாட்டுத் தலங்களில் ஆடுகள் பலியிடுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் எந்த ஒரு உயிரையும் பலியிடுவது என்பது காட்டுமிராண்டித்தனமானது.

இத்தகைய பலியிடுதலுக்கு தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக இந்து வழிபாட்டுத் தலங்களில் ஆடுகள் அதிகம் பலியிடப்படுகின்றன. இது தடை செய்யப்படுகிறது. இத்தடையை முழுமையாக மாநில அரசு அமல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் வழிபாடு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்படுகின்றன. இதை ஏற்க முடியாது. அப்படி ஏதும் பலியிடுதல் பிரார்த்தனைகள் இருந்தால் தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்ப அதை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

English summary
A court in Himachal Pradesh has banned a long tradition of sacrificing animals for religious reasons, deeming the practice cruel and "barbaric".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X