For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு அதிகரிக்கிறது?

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கான ஆதரவு அதிகரிப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை பிரகடனம் செய்திருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். அத்துடன் காஷ்மீரிலும் இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் நடத்தவும் இந்த இயக்கம் அழைப்பு விடுத்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் விஸ்வரூபமெடுத்த நிலையில் ஜம்மு காஷ்மீரத்தில் நடைபெற்ற போராட்டங்களில் அந்த இயக்கத்தின் கொடிகளும் பதாகைகளும் பறக்கவிடப்பட்டன. கடந்த 2 மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கொடிகள், பதாகைகள் பறக்கவிடப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

இவற்றை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி கண்டறிந்து அகற்றியும் வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கான ஆதரவு காஷ்மீரில் பெருகுவது கவலைக்குரியது என்று பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

English summary
Appearance of banners and flags of militant group-Islamic State (IS)-at not one but three different rallies here have alarmed the intelligence agencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X