For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலாத்கார வழக்கு: அஸரம் பாபுவுக்கு ஜாமீன் மறுப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

Asaram Bapu’s bail plea rejected by Gujarat court
அகமதாபாத்: பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் அஸரம் பாபுவின் ஜாமீன் மனுவை குஜராத்தின் காந்திநகர் மாவட்ட நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சாமியார் அஸரம் பாபுவின் அகமதாபாத் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, அவர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் அஸரம் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அஸரம் பாபு தமக்கு ஜாமீன் கோரி காந்திநகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திர்நுதார். இம்மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அஸரம் பாபுவின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

English summary
A Gujarat court on Wednesday rejected the bail plea of self-styled godman Asaram Bapu, currently lodged in prison on charges of sexually assaulting a minor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X