For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசாம் கலவரத்தை தடுப்பதில் மோடி அரசு தோல்வி: முதல்வர் தருன் கோகாய் குற்றச்சாட்டு

By Veera Kumar
Google Oneindia Tamil News

குவகாத்தி: அசாமில் நடைபெறும் கலவரங்களை தடுப்பதில் மோடி தலைமையிலான மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் தருன் கோகாய் குற்றம் சாட்டினார்.

Assam tensions: Gogoi blames Modi govt
  • அண்டை மாநிலமான நாகாலாந்தில் இருந்து வந்து அசாம் எல்லையிலுள்ள கோலகாட் மாவட்டத்திலுள்ள மக்களை சிலர் தாக்கிவருவதாகவும், இதில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 10 ஆயிரம் பேர் வீடிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • அசாம் மாநில அரசு தங்களை காக்க தவறிவிட்டதாக கூறி கோலகாட் மாவட்ட மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். காயமடைந்தவர்களை பார்க்க சென்ற அசாம் முதல்வர் தருன்கோகாய் பாதுகாப்பு வாகனங்கள் மீது கலவரக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
  • இந்நிலையில் ரங்கஜான் பகுதியில் அசாம் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளை வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சூடு மற்றும் போலீசாரின் தடியடியால் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதனிடையே அசாம் மற்றும் நாகாலாந்து மக்கள் நடுவேயான மோதலை தடுப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக அசாம் முதல்வர் தருன் கோகாய் குற்றம்சாட்டியுள்ளார். இதுவரை மத்திய அரசு சார்பில் ஒரு அதிகாரி கூட அசாமுக்கு அனுப்பப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
  • இந்த குற்றச்சாட்டை உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு மறுத்துள்ளார். ஆயிரம் துணை ராணுவ வீரர்கள், அசாம்-நாகாலாந்து எல்லைக்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். படைகளை அனுப்புவது மத்திய அரசின் வேலையென்றும், அவற்றை முறையாக பயன்படுத்துவது மாநில அரசின் கையில்தான் உள்ளது என்றும் கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.

English summary
In a shocking incident, the cops and security forces were directly firing at unarmed protesters in the violence-hit Golaghat district of Assam. At least 18 protesters were injured after police fired rubber pellets and resorted to lathicharge at Rangajan in violence-hit Golaghat district of Assam along Nagaland this evening, a senior police officer said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X